January 17, 2025

இந்து ஒற்றுமைகள் கழக மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களின் தனித்திறன் கண்காட்சி

சென்னை சூளை இந்து ஒற்றுமைகள் கழக மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களின் தனித்திறன் கண்காட்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

பள்ளி செயலாளலர் சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் தலைவர் நாகேஸ்வரராவ்,பொருளாலர் சக்கரவர்த்தி மற்றும் தலைமையாசிரியர் மாலதி ஆகியோர் முன்னிலையில் மாணவர்களின் திறமைகளை வெளிபடுத்தும் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.இதில் சிறப்பு அழைப்பாளராக புளியந்தோப்பு காவல் சரகம் உதவி ஆணையாளர் அழகேசன்,78வது மாமன்ற உறுப்பினர் வேலு ஆகியோர் கலந்துகொண்டு மாணவ,மாணவியர்களின் அறிவியல் திறன்களை வெளிபடுத்தியதை கண்டு வெகுவாக பாராட்டினர்.

இக்கண்காட்சியில் பல்வேறு பள்ளி மாணவ,மாணவியர்கள்,ஆசிரியர்கள் வருகைதந்து அறிவியல் கண்காட்சியை கண்டுரசித்தனர்.

About Author