December 23, 2024

தமிழ்நாடு யோகா ஆசிரியர்கள் சங்க கூட்டமைப்பின் 8வது ஆண்டு துவக்க விழா

சென்னை – பிப், தமிழ்நாடு யோகா ஆசிரியர்கள் சங்க கூட்டமைப்பின் 8வது ஆண்டு துவக்க விழா நிகழ்ச்சி சென்னை தி. நகர் சர்.பிட்டி. தியாகராயர் அரங்கத்தில் நடைபெற்றது.

சங்க கூட்டமைப்பின் மாநில பொதுச் செயலாளர் வே.காசிநாதன்துரை தலைமையில் நடைபெற்ற
இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தியாகராய நகர் சட்டமன்ற உறுப்பினர் ஜெ. கருணாநிதி , சேலம் மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இரா. அருள், மக்கள் பாதை பேரியக்கத்தின் தலைவர் சே . நாகல்சாமி ஐஏஎஸ் , நீதிமன்ற வழக்கறிஞரும் தமிழ்நாடு யோகா ஆசிரியர்கள் சங்க சட்ட ஆலோசகருமான வி .திருமால் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.
அதனை தொடர்ந்து செய்தியாளரை சந்தித்த சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் வே .காசிநாதன் துரை பேசியதாவது.

“தமிழ்நாட்டில் யோகா கல்வி பயின்றவர்களுக்கு தனி ஆணையம் அமைத்திட வேண்டும், அரசு பள்ளி அரசு உதவி பெறும் பணிகளில் யோகா பயிற்சியாளர் நியமிக்க வேண்டும் மேலும் முன்னாள் முதல்வர் கலைஞர் ஆட்சி காலத்தில் யோகா பயிற்சி பெற்றவர்களுக்கு முக்கியத்துவம் வழங்கியது போல் தற்போதைய முதல்வர் மு .க ஸ்டாலின் யோகா பயிற்சி பெற்றவர்களுக்கு முக்கியத்துவம் வழங்கிட வேண்டும் என்றும் எங்களுடைய முக்கியமான கோரிக்கைகளை தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டது என்றார்.
மேலும்
இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த யோகா ஆசிரியர்கள், பயிற்சியாளர்கள் 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்”.

About Author