January 23, 2025

தமிழ்நாட்டில் முதல் மற்றும் மிகப்பெரிய ‘ஹெலிகல் டோமோதெரபி’ திட்டத்தை அறிமுகம் செய்யும் அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டர்

சென்னை: மே 2023: இந்தியாவில் மிக விரிவான, நவீன புற்றுநோய் சிகிச்சையை வழங்கும் தனது செயல்நோக்கத்தையொட்டி டோமோதெரபி என அழைக்கப்படும் மிக நவீன, புற்றுநோய்க்கு எதிரான சிகிச்சை தொழில்நுட்பத்தின் சமீபத்திய தொகுப்பினை அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டர் (APCC) அறிமுகம் செய்திருக்கிறது.  இதன்மூலம் புற்றுநோய்க்கான சிகிச்சையில் ஒரு புதிய தரநிலையை அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டர் மீண்டும் ஒருமுறை நிறுவியிருக்கிறது.  புரோட்டான் தெரபியை வழங்கும் தெற்காசியா மற்றும் மத்தியக்கிழக்குப் பிராந்தியத்தின் முதல் மையமாக, புரோட்டான் மற்றும் போட்டான் சிகிச்சை முறைகளில் மிக நேர்த்தியானதை வழங்கும் பொறுப்புறுதிக்காக புகழ்பெற்றிருக்கும் அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டர், டோமோதெரபியை இப்போது கூடுதலாக இணைத்திருப்பது, புற்றுநோய்க்கு மேம்பட்ட சிகிச்சையை வழங்கும் இலக்கை நோக்கிய ஒரு முன்னேற்ற நடவடிக்கையாகும்.  

மாண்புமிகு நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் திருமதி. கனிமொழி கருணாநிதி, தமிழ்நாட்டின் முதல் ரேடிஸாக்ட்X9 டோமோதெரபி மற்றும் இந்தியாவின் முதல் உயர் துல்லிய  TMI/TMLI செயல்திட்டத்தைஇன்று தொடங்கி வைத்தார்.  விமரிசையாக நடைபெற்ற இவ்விழா நிகழ்வில் அப்போலோ ஹாஸ்பிட்டல்ஸ் எண்டர்பிரைஸ் லிமிடெட் – ன் செயலாக்க துணை தலைவர் மிஸ். ப்ரீத்தா ரெட்டி, அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டர்-ன் தலைமை செயலாக்க அதிகாரி திரு. கரண் பூரி மற்றும் அதன் மருத்துவ இயக்குனர்  & புற்றுநோய்க்கான கதிர்வீச்சியல் சிகிச்சை துறை தலைவர் டாக்டர். ராகேஷ் ஜலாலி, புற்றுநோய்க்கான கதிர்வீச்சியல் முதுநிலை ஆலோசகர்களட டாக்டர். சப்னா நாங்கியாமற்றும் டாக்டர். ஸ்ரீனிவாஸ் சிலுகுரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

ஆரோக்கியமான திசுக்களுக்கு கதிர்வீச்சு சிகிச்சையில் ஏற்படும் சேதத்தை பெரிதும் குறைக்கும் அதே நேரத்தில் கதிர்வீச்சு சிகிச்சை வழங்கலில் அதிக துல்லிய மற்றும் கட்டுப்பாட்டுத் திறனை தருகின்ற இதன் சுருள்வடிவ டோமோதெரபி தொழில்நுட்பத்தின் காரணமாக, ரேடிஸாக்ட்X9 டோமோதெரபியை தமிழ்நாட்டில் வழங்கும்மற்றும் உயர் துல்லிய TMI/TMLI செயல்திட்டத்தை மேற்கொள்ளும் இந்தியாவின் முதல் மருத்துவ மையம் என்ற பெருமையை அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டர் இப்போது கொண்டிருக்கிறது. நோயாளியை அமர / படுக்கை வைக்கும் நிலையில் காணப்படும் ஏதேனும் மாறுபடல்களை அடையாளம் காணவும், சரிசெய்யவும், புற்றுக்கட்டியில் அல்லது உடல்எடை அதிகரிப்பு அல்லது குறைதல் போன்ற பிற காரணிகளில் ஏற்படும் மாற்றங்களை கண்டறியவும் மருத்துவர்களுக்கு இதன் இமேஜிங் திறன் துல்லியமாக உதவுகிறது.  டோமோதெரபி சாதன அமைப்பின் துல்லியம், புற்றுக்கட்டியை சுற்றியுள்ள ஆரோக்கியமான திசுக்களுக்கு கதிர்வீச்சு வெளிப்படுதலை குறைப்பதால், கதிர்வீச்சு சிகிச்சையின் வழக்கமான வடிவங்களில் ஏற்படும் பக்கவிளைவுகளை விட இந்த நவீன டோமோதெரபியில் மிகக்குறைவான பக்கவிளைவுகளே நோயாளிகளுக்கு ஏற்படுகின்றன.  

மேம்பட்ட புற்றுநோய் சிகிச்சையை வழங்குவதில் அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டரின் பங்கை மனமார பாராட்டிய மாண்புமிகு நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் திருமதி. கனிமொழி கருணாநிதி, “இந்தியாவில் மருத்துவ கட்டமைப்பு மற்றும் சிறப்பான மருத்துவ சிகிச்சை வழங்கலில் தமிழ்நாடு மாநிலம் எப்போதும் முன்னணியில் இருந்து வந்திருக்கிறது.  அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டரில் டோமோதெரபி சிகிச்சை முறை அறிமுகம் செய்யப்படுவது இதற்கு மற்றுமொரு சிறப்பான எடுத்துக்காட்டாக இருக்கிறது என்று கூறுவதில் நான் பெருமை கொள்கிறேன்.  இப்புதிய தொழில்நுட்பத்தின் மூலம் தமிழ்நாட்டில் மட்டுமின்றி தெற்காசியாவிலும், மத்தியக்கிழக்கு நாடுகளிலும் கூட புற்றுநோய் சிகிச்சைக்கு புதிய தரநிலைகளை அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டர் வெற்றிகரமாக நிறுவியிருக்கிறது.  புரோட்டான் மற்றும் போட்டான் தெரபிகளில் உயர்நேர்த்தி செயல்திறனை வழங்குவது மீது அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டர் கொண்டிருக்கும் அர்ப்பணிப்பு உணர்வையும் மற்றும் நோயாளிகளுக்கான புற்றுநோய் சிகிச்சையை மேம்படுத்த மிக சமீபத்திய, நவீன தொழில்நுட்பங்கள் மீது முதலீடு செய்வதற்காகவும் அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டரை நான் உளமார பாராட்டி மகிழ்கிறேன்,” என்று கூறினார். 

அப்போலோ ஹாஸ்பிட்டல்ஸ் எண்டர்பிரைஸ் லிமிடெட் – ன் செயலாக்க துணை தலைவர் மிஸ். ப்ரீத்தா ரெட்டிஆற்றிய உரையில் கூறியதாவது: “அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டரில் டோமோதெரபி சிகிச்சைமுறை  தொடங்கப்படுவது, தெற்காசியாவில் புற்றுநோய் சிகிச்சையை மறுவரையறை செய்கின்ற ஒரு வரலாற்று சிறப்புமிக்க தருணமாகும்.  காற்று மாசு, புகைபிடித்தல் மற்றும் உடலுழைப்பற்ற சோம்பேறித்தனமான வாழ்க்கைமுறை ஆகிய பல்வேறு அம்சங்களின் காரணமாக, இந்தியாவில் புற்றுநோய் பாதிப்பு நேர்வுகளின் எண்ணிக்கை 2025-ம் ஆண்டுக்குள் ஏழு மடங்காக உயரும் என கணிக்கப்பட்டிருக்கிறது.  இத்தகைய சிக்கலான நிலையில் இந்த மேம்பட்ட தொழில்நுட்ப அறிமுக நிகழ்வு நடந்திருக்கிறது.  நோயாளிக்கான சிகிச்சை மற்றும் சேவையில் உயர்தர நிலைகளை நிறுவி உடல்நல பராமரிப்பில் பலருக்கும் வழிகாட்டும் முன்னோடியாக அப்போலோ இருந்து வருகிறது.  புரோட்டான் மற்றும் போட்டான் சிகிச்சை முறைகளில் மிக நேர்த்தியானதை வழங்கவேண்டும் என்பதற்கான முயற்சிகளில் அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டர் கொண்டிருக்கும் பொறுப்புறுதி அழகாக வெளிப்படுகிறது.  இந்த பொறுப்புறுதிக்கு மற்றுமொரு சாட்சியமாக டோமோதெரபி அறிமுகம் திகழ்கிறது.  தமிழ்நாட்டில் மட்டுமின்றி, தெற்காசியா மற்றும் மத்தியக்கிழக்கு பிராந்தியம் முழுவதிலும்  எண்ணற்ற நோயாளிகளின் வாழ்க்கையில் நேர்மறை தாக்கத்தை இது உருவாக்குவது நிச்சயம்.” 

அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டர் – ன்மருத்துவ இயக்குனர்  & புற்றுநோய்க்கான கதிர்வீச்சியல் சிகிச்சை துறை தலைவர் டாக்டர். ராகேஷ் ஜலாலி, இப்புதிய தொழில்நுட்பத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி கூறியதாவது: “கதிர்வீச்சு சிகிச்சை தொழில்நுட்பத்தில் டோமோதெரபி ஒரு குறிப்பிடத்தக்க பயன்பாடாக இருக்கிறது.  அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டரில் இதை நிறுவியிருப்பதன் மூலம் முன்னணியில் இருப்பதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்.  டோமோதெரபியின் வழியாக, ஒருகாலத்தில் சாத்தியமற்றது என்று கருதப்பட்ட அளவிற்கு கதிர்வீச்சு சிகிச்சையில் உயரளவிலான, நுட்பமான துல்லியத்தை எங்களால் வழங்க முடிகிறது.  புரோட்டான் மற்றும் போட்டான் சிகிச்சை முறைகளில் உயர்நேர்த்தியை வழங்குவதில் அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டரில் உள்ள நாங்கள் பொறுப்பும், அர்ப்பணிப்பும் கொண்டிருக்கிறோம்; புற்றுநோயை எதிர்த்துப்போராடி வெல்லும் நவீன தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய எமது சிகிச்சை தொகுப்பில் டோமோதெரபி ஒரு குறிப்பிடத்தக்க புதுவரவாகும்.” 

தெற்காசியாவில் புற்றுநோயை வெல்வதற்கான மிக நவீன மற்றும் திறன்மிக்க தொழில்நுட்பங்களை வழங்குவதில் இம்மையம் கொண்டிருக்கும் பொறுப்புறுதியை அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டரில் தற்போது நிறுவப்பட்டுள்ள டோமோதெரபி கோடிட்டுக் காட்டுகிறது.  தெற்காசியாவின் முதல் டிஜிட்டல் PET-CT மற்றும் டிஜிட்டல் நோயியல் உட்பட, நோயறிதலுக்கான சமீபத்திய சாதனங்களையும், வசதிகளையும் APCC கொண்டிருக்கிறது.  அத்துடன், மிகச்சிறப்பான அக்கறையுடன் நோயாளிகளுக்கு சாத்தியமுள்ள சிகிச்சை விளைவுகளை வழங்குவது மீது கூர்நோக்கம் கொண்டிருக்கும் உயர்திறன் மிக்க மருத்துவர்கள், செவிலியர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள் என பல்வேறு துறைகளைச் சேர்ந்த அனுபவம் மிக்க குழு உயர்நேர்த்தியான சிகிச்சை இங்கு வழங்கப்படுவதை வலுவாக உறுதிசெய்கிறது. 

#புற்றுநோயைவெற்றிகாண்பது

அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டர், சென்னை, இந்தியா குறித்து: 

அப்போலோ புரோட்டான் சென்டர் என்பது, மிக நவீன புற்றுநோய் சிகிச்சை மையமாகும். இது, தெற்காசியா மற்றும் மத்தியகிழக்குப் பிராந்தியத்தில் முதல் புரோட்டான் தெரபி சென்டர் என்ற பெருமைக்குரியது. JCI அங்கீகாரம் பெற்ற இந்தியாவின் முதல் புற்றுநோய் சிகிச்சை மருத்துவமனையாகவும் இது திகழ்கிறது. புற்றுநோய்க்கு சிகிச்சையளிப்பதற்கான APCC – ன் அணுகுமுறையின் அடித்தளமாக இருப்பவர்கள் அதன் வலுவான பல்வேறு துறைகளைச் சார்ந்த செயல்தளம் மற்றும் ஒரு புற்றுநோய் மேலாண்மை குழுவாக (CMT) உருவாக ஒன்றிணையும் அதிக திறன்மிக்க மருத்துவ நிபுணர்கள். ஒவ்வொரு CMT – யும், அவர்களது நோயாளிகளுக்கு சாத்தியமுள்ள மிகச்சிறந்த சிகிச்சை விளைவுகளை வழங்குவது மீது சிறப்பு கவனம் செலுத்துகிறது. இந்தியாவில் முதல் மற்றும் ஒரே அமைவிடத்திற்குரிய – ரோபோட்டிக் புற்றுநோயியல் செயல்திட்டம் என்ற இதன் சமீபத்திய அறிமுகம் அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டரின் திறனை இன்னும் சிறப்பாக மேம்படுத்தியிருக்கிறது.

About Author