சென்னை, மார்ச் 2024: சென்னையைத் தலைமையிடமாகக் கொண்ட இந்தியாவின் முன்னணி டிஎம்டி கம்பிகள் உற்பத்தியாளர்களான ஏஆர்எஸ் குரூப், இன்று தங்களின் புதிய தயாரிப்பான ஏஆர்எஸ் சிஆர்எஸ் 550டி-ஐ அறிமுகப்படுத்தியது. இந்த புதிய தயாரிப்பு அனைத்து வகையான கட்டுமானங்களும், அரிப்பு மற்றும் பூகம்பத்தை எதிர் கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கடந்த 2023ம் ஆண்டு ஜூலை மாதம் ஏஆர்எஸ் குழு, டிஎம்டி கம்பிகள் குறித்த பொது விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக தொழில்நுட்ப வாகனங்களுடன் தென்னிந்தியா முழுவதும் பிரச்சாரத்தை மேற்கொண்டது. இந்த பிரச்சாரத்தின் போது தொழில்நுட்ப வாகனங்கள் 2,34,223 கிமீகளுக்கு மேல் பயணித்து, 28,770 சோதனைகளை முற்றிலும் இலவசமாக மேற்கொண்டதுடன், 1,80,000 பேருக்கு தங்களின் கட்டுமானங்களுக்கு பொருத்தமான டிஎம்டி கம்பிகளை எவ்வாறு தேர்வு செய்வது என்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தியது. ஏஆர்எஸ் நிறுவனம் 4 கோடி ரூபாய்க்கும் அதிகமான இந்த சோதனைகளை பொதுமக்களுக்கு இலவசமாக நடத்தியுள்ளது. தற்போது இந்த பிரச்சாரத்தில் 13 அதிநவீன ஸ்பெக்ட்ரோமீட்டர் பொருத்தப்பட்ட தொழில்நுட்ப வாகனங்கள் தென்னிந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வருகின்றன.
ஏஆர்எஸ் குழுமத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனர் திரு.அஷ்வனி குமார் பாட்டியா கூறுகையில், “பொது மக்கள் தங்கள் கட்டுமானத் தேவைகளுக்கு மலிவான பொருட்களைத் தேர்ந்தெடுக்கும் போக்கு அதிகரித்து வருகிறது. கட்டுமானப் பொருட்கள் பற்றிய விழிப்புணர்வு இல்லாமை, தரமான பொருட்கள் கிடைப்பது மற்றும் நிதி ஆகியவை இத்தகைய நுகர்வோர் போக்குகளுக்குப் பின்னால் உள்ள காரணிகளாகும். வெளிப்புற கட்டுமானப் பணிகள் எதிர்காலத்தில் எப்போது வேண்டுமானாலும் தங்கள் தேவைகளுக்கு ஏற்ப மாற்றியமைக்கப்படலாம், ஆனால் உள் கட்டுமானங்களை மாற்றுவது கடினம் என்பதை அவர்கள் உணராததால் அத்தகைய மலிவான பொருட்களைத் தேர்வு செய்கிறார்கள். எங்கள் விழிப்புணர்வு பிரச்சார முயற்சிக்கு பொதுமக்களிடையே தொடர்ந்து ஆதரவு பெருகி வருவதால், மார்ச் 2025க்குள் மேலும் 12 தொழில்நுட்ப வாகனங்களை இந்த பிரச்சாரத்தில் ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளோம். எங்கள் “உண்மையை அறிக” விழிப்புணர்வு பிரச்சாரம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை உருவாக்கிய அதே வேளையில், வாடிக்கையாளர்களின் தேவையைப் பற்றிய சிறந்த நுண்ணறிவுகளை எங்களுக்கும் வழங்கியது. ஏஆர்எஸ் சிஆர்எஸ் 550டி என்பது பிரச்சாரத்திலிருந்து பெறப்பட்ட நுண்ணறிவுகளின் விளைவாகும். இத்தகைய தயாரிப்புகள் ஏற்கனவே சந்தையில் இருந்தாலும், அதிக விலை காரணமாக அவை பெரிய அளவிலான கட்டுமானங்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. இருப்பினும் சில்லறை வாடிக்கையாளர்களும் எதிர்கால சூழலுக்கு ஏற்ற நிலையான கட்டுமானங்களை உருவாக்க வேண்டும் என்பதற்காக மலிவு விலையில் இந்த தயாரிப்பை ஏஆர்எஸ் சில்லறை வணிகத்தில் கொண்டு வந்துள்ளது” என்று கூறினார்.
ஏஆர்எஸ் குழுமத்தின் தொழில்நுட்ப இயக்குநர் திரு.மூர்த்தி கூறுகையில், “ஏஆர்எஸ் தொழில்நுட்பக் குழு, சென்னை மற்றும் தென்னிந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் நிலத்தடி நீரின் டிடிஎஸ் அளவைச் சேகரித்துள்ளது, இதன் முடிவுகள் 800 பிபிஎம் முதல் 10,000 பிபிஎம் வரை எந்த கட்டுமானத் தேவைகளுக்கும் பொருந்தாத மொத்த கரைந்த திடப்பொருளின் (TDS) அளவு அதிகரித்துள்ளதாக காட்டுகிறது. கட்டுமானத்திற்குப் பயன்படுத்தப்படும் தண்ணீரில் குளோரைடு அயனியின் அளவு அதிகரிப்பதும், கட்டிட அரிப்புக்கு முக்கிய காரணியாக உள்ளது. கடலோரப் பகுதிகளில் இருந்து, சுமார் 60 கி.மீ., தூரம் வரை, விரைவாக கட்டிட அரிப்பு ஏற்படுவது புலப்படுகிறது. மேலும், சென்னை பெருநகரம் தற்போது நில அதிர்வு மண்டலம் 3-ன் கீழ் பட்டியலிடப்பட்டுள்ளது. இதுபோன்ற காரணிகளின் விளைவாக, புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஏஆர்எஸ் சிஆர்எஸ் 550டி பொதுமக்களின் கட்டுமானத் தேவைகளில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று கூறினார்.
ஏஆர்எஸ் குழுமம் பற்றி:
டிஎம்டி கம்பி தயாரிப்பில் மதிப்புமிக்க பெயரோடு விளங்கும் ஏஆர்எஸ் குழுமம், இந்தியாவின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த எஃகு ஆலையை தமிழ்நாட்டின் கும்மிடிப்பூண்டியில் அமைத்துள்ளது. இதன் அதிநவீன உற்பத்தி வசதி மையம் ISO9001 மற்றும் 14000 சான்றிதழ் பெற்றுள்ளது. மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக எஃகு பார்களையும், சுமார் இரண்டு தசாப்தங்களாக டிஎம்டி கம்பிகளையும் ஏஆர்எஸ் குழுமம் தயாரித்து வருகிறது. இந்நிறுவனத்தில் தயாராகும் டிஎம்டி கம்பிகளை ஸ்விட்சர்லாந்தை சேந்த எஸ்ஜிஎஸ் நிறுவனத்தால் ஆய்வு செய்து சான்றளிக்கப்படுகின்றன. ஒவ்வொரு சரக்குகளையும் வரிசைப்படுத்துவதற்கு முன் இந்த ஆய்வு நிறுவனம் ஆய்வு செய்து, சான்றளிக்கிறது. இந்த குழு பல ஆண்டுகளாக பல்வேறு மதிப்புமிக்க விருதுகளை வென்றுள்ளது.
More Stories
Prateek Kuhad Kickstarted the India Run of Silhouettes Tour 2024 in Hyderabad
Royal Brunei Airlines Launches Direct Flight to Chennai,Strengthening Ties Between Brunei and India
Spread Real Love This Deepavali 2024 with Thoughtful Last-Minute Gifts for Your Loved Ones!