January 10, 2025

லீகல் லயன்ஸ் வெல்ஃபர் அசோசேஸியன் வழக்கறிஞர்கள் ஆர்பாட்டம்

சென்னை – பிப்- , காரைக்குடி சாக்கோட்டை காவல் நிலையத்தில் வழக்கறிஞர் முத்துராஜாவை தாக்கியதை கண்டித்து லீகல் லயன்ஸ் வெல்ஃபர் அசோசேஸியன் சார்பாக எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
.
இந்த ஆர்பாட்டத்தில் லீகல் லயன்ஸ் வெல்ஃபர் அசோசேஸியன் தலைவர் பழ.கார்த்திக் , தலைமை ஒருங்கிணைப்பாளர் பவுல் துணைத்தலைவர் விக்டர் ராஜ் , செயலாளர் சிவா , பொருளாளர் , பொற்சிலை உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்..

சங்க நிரவாகிகள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
வழக்கறிஞர் முத்துராஜாவை தாக்குதலுக்கு முக்கிய காரணமான ஆய்வாளர் முத்துப்பாண்டி, உதவி ஆய்வாளர்கள் சக்திவேல் , கே முத்து காவலர் செல்வராஜ மற்றும் இவ்வழக்கின் விசாரணை அதிகாரியான சட்டம் , ஒழுங்கு ஆய்வாளர் ரவீந்திரன், ஆகியோர் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று இந்த ஆர்பாட்டத்தில் வலியுறுத்தினர் ..

About Author