February 1, 2025

ஆதித்தமிழர் கட்சி சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆதித்தமிழர் கட்சி சார்பில் நடைபெற்ற கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஆதி தமிழர் கட்சி நிறுவனத் தலைவர் ஜக்கையன் சிறப்புரை ஆற்றினார்.

அருந்ததி கட்சியின் மாநில தலைவர் வழக்கறிஞர் புருஷோத்தமன், கட்சித் தலைவர் தமிழ்இன்பன், டாம்ஸ் நிறுவனர் கொள்ளப்பள்ளி இஸ்ராயேல்,

டாம்ஸ் மாநில தலைவர் விஜயகுமார், தலித் விடுதலை இயக்கம், மாநில மகளிர் அணி செயலாளர் தலித் நதியா, அருந்ததி கட்சியின் பொறுப்பாளர் பொதுச் செயலாளர் தேவேந்திரர், அருந்ததி கட்சி திருவள்ளூர் மாவட்ட செயலாளர் கோபி,

அருந்ததி கட்சியின் அம்பத்தூர் நகர செயலாளர் ரேணு ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் முக்கிய கோரிக்கைகளாக, மூன்று சதவீத உள் ஒதிக்கீட்டில் அருந்ததியர்களுக்கான இடம் அருந்ததிருக்கே வழங்க வேண்டும், அரசாணை எண் 61 நீக்க வேண்டும், அரசு உயர் பதவி தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் அருந்ததியர்களுக்கும் மீண்டும் வழங்க வேண்டும் என்று ஆதி தமிழர் கட்சி, அருந்ததி கட்சி, டாம்ஸ் ஆகிய கட்சிகள் மூலம் கோரிக்கை வைக்கப்பட்டன.

மேலும் கவன ஈர்ப்பு ஆர்பார்ப்பட்டத்தில் டாம்ஸ் தேவதானம், சொர்னா ஜெயபால், தமிழ் சிறுத்தைகள் கட்சித் தலைவர் அகத்தியன், தலித் விடுதலை இளைஞர் அணி செயலாளர் கிச்சா, கொங்கு விடுதலைப் புலிகள் கட்சித் தலைவர் விஸ்வநாதன், ஜெய்பீம் மக்கள் கட்சி தலைவர் விஸ்வநாதன், K ஆனந்த் ராவ், ஏர்போர்ட் பாஸ்கர், சூருபோகு லக்ஷ்மய்யா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

About Author