சென்னைவாழ் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானசுந்தரம் பைனான்ஸ் மைலாப்பூர் திருவிழா 2024 இன்றுகோலாகலமாக தொடங்கியது. 20-வது பதிப்பாக இந்தஆண்டு நடைபெறும் இத்திருவிழாவின் தொடக்க நிகழ்வாகமைலாப்பூர் நாகேஸ்வரராவ் பூங்காவில் சோழிங்கநல்லூரின்ஓம்கார் இசைப்பள்ளியைச் சேர்ந்த மாணாக்கர்கள்வழங்கிய இசைக்கச்சேரி நடைபெற்றது. இதமான இனியகாலை வேளையில், மிகச்சிறப்பாக தங்களதுஇசைத்திறனை வெளிப்படுத்திய இவர்கள், அங்குகுழுமியிருந்த இசை ரசிகர்களையும், பிறவருகையாளர்களையும் இசை மழையால் நனைத்தனர்.
அதன் பிறகு சன்னதி தெரு, முச்சந்தியில்அமைக்கப்பட்டிருந்த திறந்தநிலை, பிரதான மேடையில்திருவிழாவின் பிற நிகழ்வுகள் அரங்கேறின. கபாலீஸ்வரர்கோவிலில் பல தூண்களை கொண்ட மண்டபமும் மற்றும்ஓங்கி உயர்ந்த கோபுரமும் பின்புலமாக இருக்க இசைநிகழ்ச்சியும், பொம்மலாட்டமும் அங்கு நடைபெற்றன.
குளிர்ச்சியான தென்றல் உடலை தழுவும் மாலைவேளையில், மயிலை ராஜேந்திரனின் நாதஸ்வரகலைஞர்கள் வழங்கிய நாதஸ்வர கச்சேரி சிறப்பானதொடக்கத்தை தந்தது. அதைத்தொடர்ந்து முத்து சந்துருமற்றும் அவரது குழுவினர் நடத்திய பொம்மலாட்டம் நிகழ்ச்சிஅனைவரையும் ஈர்த்தது. அங்கு கூடியிருந்தநூற்றுக்கணக்கான மக்கள், திரு. முத்து வழங்கியபொம்மலாட்ட நிகழ்ச்சியினை மிகவும் மகிழ்ச்சியோடுஅனுபவித்து ரசித்தனர்.
இந்நிகழ்ச்சிக்கு முன்னதாக பள்ளிகளுக்காக தனிப்பட்டபொம்மலாட்ட நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. காலைவேளையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மைலாப்பூர், லேடிசிவசாமி ஐயர் பெண்கள் பள்ளியைச் சேர்ந்த 300-க்கும் அதிகமான மாணவிகள், தமிழ்நாடெங்கும் புகழ்பெற்றபொம்மலாட்ட கலைஞர் திரு. முத்து சந்திரன் மற்றும்அவரது குழுவினர் வழங்கிய தோல்பாவை கூத்துகலைநிகழ்ச்சியில் மெய்மறந்தனர். இந்த மைலாப்பூர்திருவிழாவிற்காக மைலாப்பூரில் இயங்கி வரும் 6 பள்ளிகளில் இதே பொம்மலாட்ட நிகழ்ச்சியை நடத்த இந்தகலைக்குழுவினர் திட்டமிட்டிருக்கின்றனர்.
இறுதி நிகழ்ச்சியாக பழங்கால தமிழ் திரைப்படபாடல்களின் இசை கச்சேரி அங்கு குழுமியிருந்தகூட்டத்தினரை தங்களை மறந்து தாளம் போட வைத்தது. பிரபல பாடகர்களான திரு. சி.ஏ. ராஜன் மற்றும் விஜயாகடந்தகால பிரபல பாடல்களை கனகச்சிதமாக பாடிஅங்கிருந்த ரசிகர்களை பல தசாப்தங்களுக்கு முந்தையகாலத்திற்கு அழைந்துச் சென்றனர்.
மைலாப்பூர் திருவிழாவின் ஒரு அங்கமாக “பிளாஸ்டிக்பைகளைத் தவிர்ப்போம்” (“Say No to Plastic Bags”) என்றஉன்னத குறிக்கோளுக்கு சுந்தரம் பைனான்ஸ்செயல்வடிவம் தருகிறது. தங்களிடம் உள்ள பிளாஸ்டிக்பைகளை திரும்பத் தரும்போது, அதற்குப் பதிலாகமைலாப்பூரில் வசிக்கும் மக்களுக்கு ஏறக்குறைய 10,000 துணிப்பைகள் வழங்கப்படுகின்றன. இந்த துணிப்பைகளின்வினியோகத்திற்கு சுந்தரம் பைனான்ஸ் நிறுவனப்பணியாளர்களும், மைலாப்பூர் திருவிழா தன்னார்வலர்களும்ஆர்வத்தோடு உதவினர். சுற்றுச்சூழல் மீது பிளாஸ்டிக், அதுவும் குறிப்பாக மண்ணில் மக்காத பிளாஸ்டிக் பைகள்ஏற்படுத்தும் தீய விளைவுகள் குறித்து எடுத்துக்கூறிசுற்றுச்சூழலைப் பேணுவதன் விழிப்புணர்வை மக்கள்மத்தியில் பரப்பினர். தூய்மை மற்றும் துப்புரவைபராமரிப்பது மீது பொதுமக்கள் சிறப்பு கவனம்செலுத்துமாறு வலியுறுத்துகின்ற “மைலாப்பூரைதூய்மையாக பராமரிப்போம்” (Keep Mylapore Clean”) என்ற பரப்புரை செயல்திட்டத்தையும் சுந்தரம் பைனான்ஸ்மேற்கொள்கிறது.
More Stories
సూర్యకాంతం నటన అనితరసాథ్యం- నటి పద్మిని వ్యాఖ్య
உலக தியான தினம் குறித்த முக்கிய உரை நாளை இந்திய நேரப்படி இரவு எட்டு மணி அளவில் நிகழ்த்த உள்ளது
NATIONAL OPEN ROTARY PARA TABLE TENNIS TOURNAMENT – SEASON3