December 22, 2024

இந்திய கலைகளை உலகளவில் உருவாக்குவதே தங்களது நோக்கம் என ரேவா (ருக்மணி எஜுகேஷனல் விஷன் அகாடமி) பல்கலைகழகத்தின் வேந்தர் டாக்டர் பி.ஷியாமராஜூ தெரிவித்தார்

ரேவா பல்கலைக்கழகம் சார்பில் பஞ்சபூதங்களின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக பஞ்சவக்த்ரம் நடன நிகழ்ச்சி நடைபெற்றது

சென்னை மயிலாப்பூரில் உள்ள மியூசிக் அகாடமியின் பிரதான மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு டாக்டர் பி.ஷியாமராஜு தலைமை வகித்தார்.

நிகழ்ச்சியின் போது செய்தியாளர்களை சந்தித்த ரேவா பல்கலைக்கழக வேந்தர் சியாமராஜு

தங்களது ரேவா பல்கலைக்கழகத்தின் சார்பாக பஞ்சபூதங்களின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக பஞ்சவக்ரம் என்ற நாட்டிய நடன நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற்ற வருவதாகவும்

இதன் மூலம் பஞ்சபூதங்களின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி ஆனது இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களும் நடத்தத் திட்டமிட்ட இருப்பதாக தெரிவித்தார்

பருவநிலை மாற்றத்தையும் அதனை பாதுகாக்க வேண்டிய அவசியத்தையும் இந்த நாட்டியத்தின் மூலம் வெளிப்படுத்தியுள்ளோம் என கூறினார்

About Author