January 16, 2025

சுதந்திர போராட்ட வீரரும், முன்னாள் அமைச்சர் DR எச்.வி. ஹண்டேவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் வாழ்த்து

தமிழகத்தின் சுதந்திர போராட்ட வீரரும், முன்னாள் தமிழக மக்கள் சுகாதாரத்துறை அமைச்சர் மாண்புமிகு டாக்டர் எச்.வி.ஹண்டே அவர்களின் 97 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்தில் அமைச்சராக இருந்தவர். தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரகர்களுடன் நட்புடன் இருப்பவர்.

அவருடைய பிறந்த நாள் நிகழ்வு அமைந்தகரையில் நடைபெற்றது. இதில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பா.ஜ.க மாநில நிர்வாகிகள் கரு.நாகராஜன், கராத்தே தியாகராஜன், முன்னாள் மேயர் சைதை துரைசாமி, வி.ஜி.பி குழுமம் வி.ஜி.சந்தோஷம், தொழிலதிபர் நல்லி குப்புசாமி, புதிய நீதிக் கட்சி நிறுவனர் ஏ.சி.சண்முகம், நடிகர்கள் பிரசாந்த்,இந்திய சுதந்திரப் போராட்ட மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மன் வம்சம், உயர் நீதிமன்ற வழக்கறிஞர் டாக்டர். இளைய கட்டபொம்மன் B.A.B.L, Dr.cmk reddy, dr. j s raj kumar , ரமேஷ் கண்ணா உள்ளிட்டோர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

About Author