January 8, 2025

சென்னையில் ஈவெண்ட் ஆர்ட் நிறுவனத்தின் லட்சுமி மற்றும் சரஸ்வதி ஒருங்கிணைத்த 2 ஆம் ஆண்டு மார்வெலஸ் மார்கழி திருவிழா

மீனம்பாக்கம் ரேடிசன் ப்ளூ நட்சத்திர விடுதியில் நடைபெற்ற மார்வெலஸ் மார்கழி 2 ஆம் ஆண்டு திருவிழா நமது கலாச்சாரத்தைக் கொண்டாடும் வகையில் அமைந்தது.

இந்நிகழ்ச்சியில், நடிகை சினேகா, அப்போலோ மருத்துவமனை குழுமத்தின் துணை தலைவர் பிரீத்தா ரெட்டி உள்ளிட்டோர் கலந்து கொள்ள, சுகாசினி மணிரத்னம் தொகுத்து வழங்கினார்.

பாடகர்கள் ராகுல் வெள்ளாள், ரித்விக் ராஜா, சந்தீப் நாராயண், மகதி, சூர்யா காய்த்ரி, அருணா சாய்ராம், ஸ்ரீரஞ்சனி சந்தனகோபாலன், ஹரி பிரியா, ஷண்முகா பிரியா, சிக்கில் குருச்சரண் உள்ளிட்டோர் பாரம்பரிய நகைகள் மற்றும் உடையலங்காரத்தில் ஒய்யார நடையில் பார்வையாளர்களை கவர்ந்தனர்.

அதேபோல, டாக்டர். பத்மா சுப்பிரமணியம், ஊர்மிளா சத்யநாராயணன், மீனாட்சி சித்தரஞ்சன், கோபிகா வர்மா, அனிதா ரத்னம், ஸ்ரீகலா பாரத், மகதி கண்ணன், காயத்ரி கண்ணன், ஸ்வேதா பிரசாண்டே, ராதே, ஸ்ரீஷா உள்ளிட்ட நடனக் கலைஞர்களும், அனில் சீனிவாசன், கணேஷ் மற்றும் குமரேஷ், பி. கண்ணன், மண்டோலின் ராஜேஷ், ராகேஷ் சௌரசியா, ஷஷாங்க், ஜெயந்தி குமரேஷ் மற்றும் சாருமதி, பிக்ரம்கோஷ், ராஜேஷ் வைத்யா, செல்வா கணேஷ் மற்றும் சுவாமிநாதன், சிக்கில் குருச்சரண் உள்ளிட்ட இசைக் கலைஞர்களும் ஜி. ஆர். டி ஜுவல்லர்ஸ்- சின் பிரத்யேக வடிவமைப்பு மற்றும் கலைநயத்துடன் உருவாக்கப்பட்ட பாரம்பரிய நகைகளுடன் ரேம்பில் நடைபோட்டு பார்வையாளர்களை கவர்ந்தனர்.

சென்னையின் வளமான கலை மற்றும் கலாச்சார பாரம்பரியத்தின் இணையற்ற கொண்டாட்டமாக இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இது சென்னை நகரத்தின் கலாச்சார வரலாற்றில் அழுத்தமான முத்திரையை பதித்துள்ளது.

மேலும் ரேடிசன் ப்ளூ ஹோட்டல் அண்ட் சூட்ஸ் ஜி.ஆர்.டி சென்னையின் எக்ஸிக்யூடிவ் செஃப் கிஷோர் குமார் நீதி, தனித்துவமான உணவு வகைகளை வழங்கி அசத்தினார். இது அசத்தலான கர்நாடக இசை ஆன்மாவுடன் இணைத்து செவிப்புலன்களுக்கும், வயிற்றுக்கும் இணையற்ற சுகமான அனுபவத்தை வழங்கியது.

ஜி. ஆர். டி ஹோட்டல்ஸ் & ரிசார்ட்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி விக்ரம் கோட்டா கூறுகையில், “பாரம்பரிய கலை வடிவங்களுக்கு தங்களை அர்ப்பணித்துக் கொண்ட கலைஞர்களைக் கொண்டாடும் ஒரு தளத்தை உருவாக்க, இந்த மார்வெல்ஸ் மார்கழி நிகழ்ச்சியில் ஒருங்கிணைவதில் மகிழ்ச்சியடைவதாக தெரிவித்தார். அற்புதமான மார்கழி என்பது, பழமையான மரபுகளுடன் நவீன உணர்வுகளை சங்கமிக்கும் இடம் என்றும், ஜி. ஆர். டி ஹோட்டல்களில், பொறுப்பான முறையை உள்ளடக்கிய நமது வளமான கலாச்சாரம், உணவு வகைகள், நகைகள் மற்றும் பாரம்பரிய உடைகளை ஊக்குவிப்பதில் பெருமிதம் கொள்வதாகவும் தெரிவித்தார். புதிய, ஈர்க்கக்கூடிய கண்ணோட்டங்கள் வாயிலாக கலையை வழங்குவதன் மூலம், மறக்கமுடியாத மற்றும் கலாச்சார ரீதியாக வளமான அனுபவங்களை உருவாக்குவதற்கான தங்கள் பிராண்டின் உறுதிப்பாட்டை இந்நிகழ்ச்சி வலுப்படுத்துகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த ஆண்டு கிராமி விருது பெற்ற கணேஷ், செல்வகணேஷ் மற்றும் ராகேஷ் சௌராசியா ஆகியோர் கிராமி விருதுகளுடன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

ஈவென்ட் ஆர்ட் நிறுவனத்தின் 21வது ஆண்டில் இது போன்ற ஒரு தனித்துவம் வாய்ந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பதில் மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்த லட்சுமி மற்றும் சரஸ்வதி சென்னையின் மிக முக்கிய பிரபலங்களை இந்நிகழ்ச்சியில் பங்கேற்கச் செய்து மார்கழி மாதத்தின் மகத்துவத்தை கொண்டாடியதாக தெரிவித்தனர்.

இந்த பிரம்மாண்ட நிகழ்ச்சியின் நடன இயக்குனர் பிரியா மணிகண்டன் அனைத்து பிரபலங்களையும் ஒருங்கிணைத்து வழி நடத்தினார்.

About Author