December 22, 2024

சென்னையில் “சோல் வாக் இன் ஃபேஷன்” நிகழ்வு

எஸ்டபிள்யூஎஃப் எனப்படும் “சோல் வாக் இன் ஃபேஷன்”என்பது ஃபேஷனை வெளிப்படுத்த விரும்பும் நபர்களின் உள்ளுணர்வின் தனித்துவமான உணர்வை குறிக்கிறது. ஃபேஷன் என்பது நாம் அணியும் ஆடைகள் மட்டுமல்ல, அது தனித்துவத்தின் உண்மையான பிரதிபலிப்பாகும் என்று நாங்கள் நம்புகிறோம். ஏனெனில் ஒருவரின் தனித்துவமான ஸ்டைலானது ஃபேஷனில் அடுத்து வரவிருக்கும் புதிய சூழ்நிலைக்கு ஏற்ப செயல்படுகிறது. கிறிஸ் லெகாசி அன்ட் கால் காஸ்மெடிக்ஸ் (Chriss legacy & Cal Cosmetics) உடன் இணைந்து, வளர்ந்து வரும் திறமையாளர்களுக்கு அவர்களின் சமீபத்திய கலெக்ஷன்களை பிரபலப்படுத்தவும், ஒவ்வொரு ஆண்டும் வரவிருக்கும் ஃபேஷன் பருவங்களுக்கான எதிர்கால டிரெண்டுகளை ஏற்படுத்தவு,ம் ஃபேஷன் மற்றும்  லைஃப்ஸ்டைல் நிகழ்வுகளை உருவாக்கவும் இந்த நிறுவனத்தை நாங்கள் நிறுவியுள்ளோம். ஃபேஷன் டிசைனிங் மாணவர்கள் மற்றும் ஆர்வலர்கள் தங்கள் ஆக்கப்பூர்வமான தொலைநோக்கு பார்வை, ஸ்டைல் மற்றும் அழகியல் ஆகியவற்றை பார்வையாளர்களுக்கு தெரிவிப்பதற்காக எங்களால் கவனமாக கையாளப்படும் தளத்தை பயன்படுத்துவதற்காக அழைக்கப்படுகிறார்கள். டிசைனர்கள், மாணவர்கள், அழகுக்கலை நிபுணர்கள் உள்ளிட்டோர் ஃபேஷன் துறையில் வளரும் திறமையாளர்களுக்கான பல்வேறு ஃபேஷன் மற்றும் லைஃப்ஸ்டைல் ​​போட்டிகளுக்கான நுழைவு வாயிலாகவும், ஃபேஷன் உலகில் தங்களின் முக்கிய இடத்தைக் கண்டறிவதற்காக அவர்களின் ஆக்கப்பூர்வமான தொலைநோக்கு பார்வை, ஸ்டைல் மற்றும் அழகியல் ஆகியவற்றை வெளிப்படுத்தும் இடமாகவும் இது அமைந்துள்ளது. இது ஒரு மன்றமாக செயல்படுகிறது.

1. டிசைனர்கள் தங்களின் பிராண்ட் அடையாளத்தை நிறுவுவதற்கும், வலுப்படுத்துவதற்கும், பார்வையாளர்களை வசீகரிக்கும் வகையில் அவர்களின் கலெக்ஷன்களை  காட்சிப்படுத்துவதற்கும் இணையற்ற வாய்ப்பை வழங்குகிறது.

2. புதிய டிசைனர்கள் ஃபேஷன் ரன்வே விளக்கக்காட்சிகள் மூலம் தங்களின் தயாரிப்புகளை பிரபலப்படுத்தும் முதல் வாய்ப்பை பெறுகிறார்கள்.

3. ஃபேஷன் ஷோக்களில் உள்ளார்ந்த கலைத்திறன் மற்றும் கதைசொல்லல் மூலம், டிசைனர்கள் தங்களின் தனித்துவமான அடையாளத்தை உறுதிப்படுத்தி, பிராண்ட் பற்றிய விழிப்புணர்வை உருவாக்க முடியும்.

4. சமூக ஊடகங்கள் அதிகரித்துள்ள நிலையில், டிசைனர்கள் தங்கள் பிராண்ட் பற்றிய செய்திகளை தெரிவிக்க அவர்களை தொடர்புகொள்வதற்கும், அவை பரந்த பார்வையாளர்களை சென்றடைவதற்கும், அவர்களின் கலெக்ஷன்களை பற்றி ஒரு பரபரப்பை உருவாக்குவதற்கும் ஊடக வெளிப்பாடானது ஒரு மதிப்புமிக்க தளத்தை வழங்குகிறது.

5. பேஷன் ஷோக்கள் பிராண்ட் விழிப்புணர்வை மேலும் அதிகரிக்கவும், ஃபேஷன் நிபுணர்களை அவர்களின் முடிவெடுக்கும் செயல்முறைகளில் வழிகாட்டவும் பயன்படுகிறது.

6. விருதுகள் மற்றும் வெகுமதிகள் தவிர, நிகழ்ச்சியின் சிறந்த டிசைனர்கள், பயிற்சிகள், பட்டறைகள் மற்றும் கருத்தரங்குகள் மூலம் அனுபவங்களை பெறுவதன் மூலம் அவர்களின் கடின உழைப்பின் பலனைப் பெறுவார்கள்.

எஸ்டபிள்யூஎஃப் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்வுகளின் பட்டியல்

1. பேஷன் ஷோக்கள்

2. தியேட்டர் நாடகம்

3. அழகுப் போட்டிகள்

4. விருது நிகழ்வுகள்

5. ஃபேஷன் திருவிழாக்கள்

6. காஸ்பிளே ஃபேஷன்

7. தீம்ட் காலா’ஸ்

About Author