மாநில பொதுச்செயலாளராக y ரமேஷ் மாநில பொருளாராக பருத்திப்பட்டு நரசிம்மனும் துணைப் பொதுச்செயலாளராக பூந்தமல்லி ராமனாத ஐயரும் தலைமை நிலைய செயலாளராக மயிலை பாலுவும் மாநில இளைஞர் செயலாளராக மணிகண்டனும் மாநில மகளிர்அணி செயலாளராக பிரபாவதியும் மாநில மூத்த துணைத்தலைவராக திருவொற்றயூர் பாலசுப்ரமணியனும் நியமிக்கப்பட்டனர்
மேலும் மாநிலத்துணைத்தலைவராக பெரம்பூர் சுந்தரி ரெங்கநாதனும் மற்றும் பல மாநில ஆலோசகர்களும் மாநில துணைத்தலைவர்களும் மாநில செயலாளர்களும் மாநில இணைச்செயலாளர்களும் நியமிக்கப்பட்டனர்
மாநில கொள்கை பரப்பு செயலாளர்களும் நியமிக்கப்பட்டனர்.
மாநிலத் தலைவர் தன்னுடைய சிறப்புரையில் தன்னை மீண்டும் மாநிலத் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கும் மாநிலத் தலைவர் தேர்தலை சிறப்பாக நடத்திக்கொடுத்த தேர்தல் அதிகாரி சத்தியமூர்த்தி அவர்களுக்கு நன்றி கூறினார்
பொன்விழாவினை நோக்கிச் செல்லும் நம்சங்கத்திற்கு அனைவரும் ஒற்றுமையுடன் பாடுபட வேண்டும் எனவும் மாநிலத்தலைவர் கேட்டுக்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து சங்கத்தின் தலைவர் பல்வேறு முக்கிய தீர்மானங்களை வாசித்தார் அதில் முக்கிய தீர்மானங்களான மத்திய அரசு சட்டபூர்வமாக நடைமுறைப்படுத்தி உள்ள பொருளாதார அடிப்படையில் நலிந்தோருக்கான E W S பத்து சதவீத இட ஒதுக்கீட்டினை தமிழக அரசு கொள்கை ரீதியாக ஏற்றுக் கொள்ளவில்லை என்று நமக்கு எழுத்து வாயிலாக தெரியவந்துள்ளது இந்த முடிவினை தமிழக அரசு மறுபரிசீலனை செய்திட வேண்டும் மேலும் மத்திய அரசின் முழு நிதி உதவியுடன் நடத்தப்படும் ஏழை எளிய மற்றும் கிராமப்புற மாணவ மாணவிகளுக்கு பயனளித்திடும் நவோதியா பள்ளிகளை தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் துவங்கிட தேவையான ஒத்துழைப்பினை மாநில அரசு செய்து தர வேண்டும் கேரளா அரசு நியமித்திருக்கின்ற அடிப்படையில் தமிழகத்திலும் முற்பட்ட சமூகங்களை சார்ந்த நலிந்தோருக்கு உதவிடும் வகையில் ஓர் தனி நல வாரியம் அமைத்திட தமிழக அரசுக்கு இந்த செயற்குழு மூலம் வேண்டுகோள் வைக்கப்பட்டது மேலும் அனைத்து மாவட்ட தலைவர்களும் தங்கள் நிர்வாகிகளுடன் ஒரு குழுவாக சென்று மாநில தலைவர் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்தும் செங்கோல் வழங்கியும் கிரீடம் அணிவித்தும் தங்கள் மகிழ்ச்சியினை தெரிவித்து குழு புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர் மேலும் இந்த நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாக செய்த விழுப்புரம் மாவட்ட தலைவர் ஆர் குமார் அவர்களையும் மாநில அமைப்பு செயலாளர் எல் குமார் அவர்களையும் பாராட்டி வாழ்த்தி பேசி பொன்னாடை அணிவித்து கௌரவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாநில பொதுச்செயலாளர் Y ரமேஷ் வரவேற்புரை நல்க துணைப் பொதுச்செயலாளர் ராமனாத ஐயர் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியின் நிறைவுறையாக ஸவஸ்தி வாசகம் தேசிய கீத்த்துடன் விழா நிறைவுற்றது


More Stories
‘Drug Free Tamil Nadu 1000 people participated in the Grand human chain rally.
శోభా రాజా నివాసంలో వైభవంగా వరలక్ష్మీ పూజలు
கோவையை அதிர விடும் போதைப்பொருள் மன்னன்… ஆளும் கட்சி ஆதரவில் அட்டூழியமா? – யார் இந்த அரவிந்த்?