December 24, 2024

திருப்பத்தூர் அருந்ததியினர் இலவச வீட்டு மனை பட்டா கேட்டு ஆட்சியரிடம் மனு

திருப்பத்தூர்:திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள திருப்பத்தூர்,வாணியம்பாடி,நாட்றம்பள்ளி தாலுக்காவிற்குட்பட்ட பொன்னியம்மன் கோவில் வட்டம், பெருமாள் கோவில் வட்டம்,சின்ன கந்திலி,அச்சமங்களம்,வெலக்கல்நத்தம்,தாமலேரிமுத்தூர்,அம்மணாங்கோயில் ஊர்களில் வசித்து வருகின்ற பட்டியலின அருந்ததியர் மக்களுக்கு இலவச வீட்டுமனை வழங்க அருந்ததியர் இட ஒதுக்கீடு போராட்ட இயக்கம்(MRPS)-ன் திருப்பத்தூர் மாவட்ட தலைவர் திரு.S.சின்னகாளி அவர்கள் தலைமையில் தமிழ்நாடு மாநில தலைவர் த.லோகேஷ்குமார் கலந்து கொண்டு மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் கோரிக்கை மனுக்களை அளித்தார்.மேலும் இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் K.சரவணன் மாநிலஇணைச்செயலாளர் D.Y.சீனிவாசன் மற்றும் மாவட்ட,ஒன்றிய நிர்வாகிகள் மகளிரணியினர் திரளாக பங்கேற்றனர்.

*.பஞ்சமி நிலங்களை மீட்டு அருந்ததியர் மக்களுக்கு வழங்கிடவும் கோரிக்கை வைக்கப்பட்டது.

About Author