December 23, 2024

திருப்பத்தூர் மாவட்ட காவல் துறையினர் மற்றும் அவர்களது குடும்பத்திற்கான மாபெரும் சிறப்பு மருத்துவ முகாம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் பணிபுரியும் அனைத்து போலீசார் மற்றும் அவர்களின் குடும்பத்தினர்களுக்கான மருத்துவ முகாம் திருப்பத்தூர் தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட ஆட்சியர் திரு.அமர் குஷ்வாஹா தலைமைதாங்கி குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார், போலீஸ் சூப்பிரண்டு திரு .பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.
முகாமை டாக்டர் எம். அருண் குமார் தலைமையில் (IFPWD , Six Sigma health care and IMA ) நூற்றுக்கும் மேற்பட்ட சீனியர் டாக்டர்கள், பயிற்சி டாக்டர்கள் பங்கேற்று இருதயம், எக்கோ இசிஜி கண் பல் உள்ளிட்ட பொது மருத்துவ சிகிச்சைகளை போலீசார் குடும்பத்தினர் ஆயிரம் பேருக்கு சிகிச்சை அளித்து மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது
இந்த முகாமில் திரு.டாக்டர் J.A ஜெயலல் முன்னாள் தேசிய தலைவர் இந்திய மருத்துவ சங்கம், ராமச்சந்திர, அப்பல்லோ, ராகஸ் மாற்று பல மருத்துவமனைகள் மருத்துவர்கள் பலர் கலந்துகொண்டனர்.

About Author