December 24, 2024

போரூரில் தனியார் மூலிகை நிலையத்தின் ஐந்தாவது கிளை திறப்பு விழா

சிவாஜி, எம்ஜிஆர் சாதனையாளர்கள் இவர்களால் வாழ முடியவில்லை அவர்களை விட 10 வயது நான் கூடுதலாக வாழ்ந்திருக்கேன் அதுதான் சாதனை நடிகர் சிவகுமார் பேச்சு

போரூரில் தனியார் மூலிகை நிலையத்தின் ஐந்தாவது கிளை திறப்பு விழா நடைபெற்றது இதில் நடிகர் சிவக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தொடங்கி வைத்துவிட்டு உரையாற்றினார் அப்போது அவர் பேசுகையில் :

நான் 16 வயதிலிருந்து யோகாசனம் செய்து வருகிறேன் 30 ஆசனங்களை நான் செய்து வருகிறேன்.

1958 ல் யோகா மாஸ்டர்கள் எங்கேயோ இருப்பார்கள் நம்மால் கற்றுக் கொள்ள முடியாது வார இதழ்களில் யோகா குறித்து எழுதுவார்கள் புத்தகங்களில் வந்த யோகாவை படித்து கற்று கொண்டேன்.

உடல் பழுதானால் சொல்லாமல், கொள்ளாமல் உயிர் போய்விடும்

வெறும் வயிற்றில் வீட்டை விட்டு வெளியே செல்லாதீர்கள் பழைய சாதத்தில் தண்ணீரை ஊற்றி அதை குடித்தால் நல்லது. நான் காலையில் வெறும் பழங்கள் மட்டும் தான் சாப்பிடுகிறேன்.

மது மாது சூது என சென்று விட்டால் அனைத்தும் காலி

சிவாஜி, எம்ஜிஆர் இவர்களால் வாழ முடியவில்லை அவர்களை விட 10 வயது நான் கூடுதலாக வாழ்ந்திருக்கேன் அதுதான் சாதனை என பேசினார்

About Author