December 17, 2024

முதியோர்களை நன்றாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதுதான் என் கிறிஸ்துமஸ் செய்தி ~ பிரேமலதா விஜயகாந்த்

முதியோர் இல்லத்திற்கு ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்கள், ஒரு பீரோ, 120 பேருக்கு போர்வை, மருந்து பொருட்கள் உள்ளிட்டவற்றை வழங்கி வழங்கினார்…

முன்னதாக முதியோர்களோடு கேக் வெட்டி கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடிய பிரேமலதா விஜயகாந்த் முதியோர்களுக்கு ஆறுதல் கூறி கண் கலங்கியபடி உருக்கமாக கலந்துரையாடினார்.  தொடர்ந்து அவர்களுடன் அமர்ந்து மதிய உணவு அருந்தினார்…

இந்த நிகழ்வில் தேமுதிக துணைப் பொதுச்செயலாளர்கள் சுதீஷ், பார்த்தசாரதி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்

பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

முதியோர்களுடன் இணைந்து கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாடினோம்.. அவர்களோடு இருந்த நேரம் மகிழ்ச்சி அளிக்கிறது. எல்லாரும் முதியோர்களை நன்றாக பார்த்துக்கொள்ள வேண்டும் என் கிறிஸ்துமஸ் செய்தியே அதுதான்.  அம்மா, அப்பா நம்மளை வளர்த்து ஆளாக்க எவ்வளவோ சிரமம் படுகிறார்கள்.. அவர்களுக்கு ஒரு வயது வரும் போது அவர்களை பார்க்க யாரும் இல்லாத நிலையில் முதியோர் இல்லத்தில் இருக்கும் நிலை வருகிறது. இது என் மனதை பாதிக்கிறது. அதனால் வாழும் தெய்வங்களாக கண் முன்னே இருப்பவர்கள்  அம்மா, அப்பாதான்.. கேரளாவில் ஒரு மருமகள் மாமியாரை பிடித்து தள்ளும் ஒரு சம்பவம் என் மனதை பாதித்தது… அந்த அம்மாவுக்கு தேமுதிக சார்பில் எங்கள் ஆறுதலை தெரிவித்துக்கொள்கிறோம். இன்னைக்கு மருமகளாக இருப்பவர்கள் நாளை மாமியராக ஆகும் நிலை வரும்.. உறவுகளை கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொள்ள வேண்டும்.

நிர்மலா சீதாராமன் பேசியது அநாகரீகமாக எனக்கு தெரியவில்லை.. உதயநிதி பேசியதற்குதான் நிர்மலா சீதாராமன் பதில் அளித்துள்ளார்…  உதயநிதி ஸ்டாலின் இன்றைக்கு முக்கிய பொறுப்பில் உள்ளார். ஒரு வார்த்தையை பேசுவதற்கு முன் யோசிக்க வேண்டும். வாயை விட்டு வார்த்தை வந்துவிட்டால் அது நமக்கு எஜமான் ஆகிவிடும். உதயநிதி வயதிற்கு அவர் பயன்படுத்தும் வார்த்தை அனைவரும் கண்டிக்கும் நிலையில்தான் உள்ளது.

தமிழ்நாட்டில் நடக்கும் அனைத்தும் கலைஞர் பேரில் தான் இருக்கிறது.. ஆனால் எல்லாம் மக்கள் வரிப்பணம்.. அதனால் பொறுப்பில்லாமல் பேசக்கூடாது.

தூத்துக்குடி, நெல்லையில் மழையால் பாதித்த மக்களை சந்தித்தேன்… எங்களால் முடிந்த உதவிகளை செய்தோம். தூத்துக்குடியில் அதிக கிறிஸ்துவர்கள் உள்ளனர்.. அவர்களுக்கு இது கருப்பு கறிஸ்துமஸ்தான்.. அந்த அளவிற்கு தூத்துக்குடி பாதிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் எல்லா பணிகளும் முடிந்ததாக தலைமைச் செயலாளர் சொல்கிறார்.. அது வருத்ததிற்குரிய விஷியம்.. ஸ்ரீவைகுண்டம் பகுதியை இன்றைக்கும் தொடர்புகொள்ள முடியவில்லை…  களத்தில் ஆளும் கட்சியை நான் எங்கேயும் பார்க்கவில்லை. வாக்கு வாங்குவது மட்டும் ஆளும் கட்சியின் வேலை இல்லை.

மழை வெள்ளத்தில் எத்தனை பேர் உயிர் இழந்துள்ளனர் என வெள்ளை அறிக்கை கொடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்ய வேண்டும்.

எண்ணூரில் மீனவர்கள் தான் அதிகம்.. கடலுக்கு போனால்தான் அவர்களுக்கு வாழ்வாதாரம்.. மீனவர்களுக்கு 5 லட்சம் வரை நிவாரணம் கொடுக்க வேண்டும்..

சி.பி.சி.எல். மீனவர்களுக்கு நிவாரண தொகை உடனடியாக வழங்க வேண்டும் என நான் அன்றைய தினமே அண்ணாமலை, எல்.முருகனுக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு மத்திய அமைச்சரிடம் முறையிட்டுள்ளேன். இருவரும் எங்களிடம் உறுதி அளித்துள்ளனர். நிச்சயம் நிவாரண தொகை பெற்றுத்தர வேண்டும்

About Author