November 15, 2024

ரமண பகவானின் 144 வது ஜெயந்தியை முன்னிட்டு பெங்களூருவை சேர்ந்த தொழிலதிபர் திருவண்ணாமலையில் அன்னதானம்

ரமண பகவானின் 144 வது ஜெயந்தியை முன்னிட்டு பெங்களூருவை சேர்ந்த தொழிலதிபர் திம்மகவுடா,சுனிதா திம்மகவுடா மற்றும் அசோக்குமார் ஆகியோர் திருவண்ணாமலையில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு இரண்டு நாட்கள் மாபெரும் அன்னதானம் வழங்கி சேவை செய்து வழிபாடு

1879 ஆம் ஆண்டு திருச்சூழி கிராமத்தில் மார்கழி மாதம் புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர் ஸ்ரீ ரமண பகவான். திருவண்ணாமலை – செங்கம் சாலையில் அமைந்துள்ளது ஸ்ரீ.ரமண பகவானின் ரமணாசிரமம்.

ஒவ்வொரு ஆண்டும் ரமண பகவானுக்கு மார்கழி மாத புனர்பூச நட்சத்திரத்தன்று ஜெயந்தி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும்.

அதன்படி 144- வது ஜெயந்தி விழா ரமணர் ஆசிரமத்தில் வெகு விமர்சையாக தொடங்கி நடைபெற்றது.

முன்னதாக ரமண பகவானுக்கு தயிர் சந்தனம் பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு வண்ண வண்ண மலர்களை கொண்டு மலர் மாலைகள் தொடுத்து சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

இதற்காக ரமணரின் பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் பல்வேறு மாவட்ட மாநிலங்களில் இருந்தும் பல்வேறு வெளிநாடுகளில் இருந்தும் ரமணாசிரமத்தில் குவிந்துள்ளனர்.

ஆன்மீக பக்தர்களுக்காக கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சுனிதா திம்மகவுடா, மரு. திம்மகவுடா மற்றும் அசோக்குமார் ஆகியோர் தலைமையில் ரமணாசிரமம் அருகில் அன்னதானம் வழங்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

திருமலா திருப்பதி தேவஸ்தான கண்காணிப்பாளர் வெங்கட்ரமண ரெட்டி அன்னதானத்தினை தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து
காஞ்சிபுரம் இட்லி, கேசரி, போளி, உப்புமா, வெஜிடபிள் பிரியாணி உள்ளிட்ட பல்வேறு வகையான அன்னதானங்கள் ரமண பக்தர்களுக்கும் கிரிவலம் பக்தர்களுக்கும் வழங்கப்பட்டது.

ரமண ஜெயந்தி தினமான இன்று அதிகாலை 6 மணி முதல் தொடர்ச்சியாக 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு இட்டிலி பொங்கல் கேசரி போளி சாம்பார் சாதம் தயிர் சாதம் உள்ளிட்ட பல்வேறு வகையான உணவு வகைகளை தயார் செய்து சுனிதா திம்ம கவுடா குடும்பத்தினர் தொடர்ந்து அன்னதானத்தை வழங்கினர்.இரண்டு நாட்களாக பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு அறுசுவை உணவுகள் பரிமாறி உபசரிப்பு.

ரமண பக்தர்களும் கிரிவல பக்தர்களும் நீண்ட வரிசையில் நின்று அன்னதானத்தை வாங்கி உண்டு மகிழ்ந்தனர்.

About Author