
சென்னை, 1 ஆகஸ்ட் 2023: சோலார் பேட்டரிஉற்பத்தியில் முன்னணி நிறுவனமாக திகழும் அரென்க்நிறுவனம் மின் தடை பிரச்சினைக்கு சிறந்த தீர்வுஅளிக்கும் வகையில் நவீன தொழில்நுட்பத்தில்லித்தியம் பேட்டரியுடன் சுவர்களில் பொருத்தும்சோலார் இன்வெர்டரை அறிமுகம் செய்துள்ளது.
இந்த லித்தியம் பேட்டரியானது சோலார் மற்றும் மின்சாரம் இரண்டையும் சார்ஜ் செய்யும் திறன் கொண்டதாகும். எனவே இது பயனர்களுக்கு சிறந்தவசதியையும் நம்பகத்தன்மையையும் அளிக்கிறது.மேலும் இந்த இன்வெர்டரை பராமரிக்க வேண்டியஅவசியமும் இல்லை. 100 சதவீதம் எந்தவிதமானபராமரிப்பும் தேவையற்ற முறையில் இதுவடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, இது பயனர்களுக்கு தொந்தரவு இல்லாத பயன்பாட்டிற்கு உறுதி அளிக்கிறது. இந்த இன்வெர்டரில் டிஜிட்டல் டிஸ்ப்ளே மானிட்டர் உள்ளது. இது பேட்டரி பேக்கப் மற்றும் அதன் திறன் பற்றிய தகவல்களை வழங்குகிறது. இதை ஆண்ட்ராய்டு செயலி மூலமாகவும் கண்காணிக்கும் வகையில் இதுவடிவமைக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொருவரின் மின்சாரத் தேவைக்கு ஏற்ப இந்தபுதிய இன்வெர்டர் 850 வாட்ஸ் மற்றும் 1200 வாட்ஸ்ஆகிய 2 மாடல்களில் கிடைக்கிறது. 850 வாட்ஸ் எடை28 கிலோவாகவும், 1200 வாட்ஸ் எடை 35 கிலோவாகவும் உள்ளது. எனவே இதை எளிதாகசுவர்களில் பொருத்த முடியும்.
தனது விற்பனை மற்றும் சேவைகளை விரிவுபடுத்தும்வகையில் இந்நிறுவனம் கேரளா மற்றும் சென்னையில்வினியோகஸ்தர்களை நியமிக்கும் பணியில் தீவிரமாகஈடுபட்டுள்ளது. இதன் மூலம் தனது தயாரிப்புகளைமாநிலம் முழுவதும் கொண்டு செல்ல இந்நிறுவனம்திட்டமிட்டுள்ளது.
அரென்க் நிறுவனம், கேரள அரசின் முக்கிய பொதுத்துறை வாகன உற்பத்தி நிறுவனமான கேரளா ஆட்டோமொபைல்ஸ் லிமிடெட் உடன் இணைந்து, மின்சார வாகன உற்பத்தியில் சிறப்பாக ஈடுபட்டுள்ளது.தங்களின் இந்த புதிய அறிமுகத்தின் மூலம்புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் தங்களை ஒருமுன்னணி நிறுவனமாக நிலைநிறுத்திக் கொள்வதோடுசூரிய ஆற்றலை பயன்படுத்துவதையும்மேம்படுத்துவதையும் முக்கிய நோக்கமாககொண்டுள்ளது.
More Stories
Orion Innovation Named in Everest Group’s PEAK Matrix® Assessment 2025 for Data & AI Services
Historic visit of National President JFS Ankur Jhunjhunwala to Tamil Nadu
New Logitech Report: Early Support Crucial to Retain Women in India’s Tech Workforce and Promote Gender Equality