ஏ சி எஸ் கல்வி குழுமம சார்பில்
ஸ்ரீபெரும்புதூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 5. கோடி மதிப்பீட்டில் ஏழு வகுப்பறைகள் கொண்ட கட்டிடங்கள் திறப்பு விழா நடைபெற்றது . இந்த திறப்பு விழாவில் ஏ சி எஸ் குழுமத்தின் நிறுவனரும் புதிய நீதி கட்சியின் தலைவருமான ஏ.சி. சண்முகம் கலந்துகொண்டு திறந்து வைத்து வகுப்பறைகளை பார்வையிட்டு மாணவ மாணவிகளின் பயன்பாட்டுக்கு அர்பணித்தார்
தலைமை ஆசிரியை ஞான செல்வ ஜோதி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஏ .சி .எஸ் . கல்வி குழுமத்தின் நிர்வாக அறங்காவலர் லலிதாலட்சுமி சண்முகம் ,
ஏ.சி.எஸ் மருத்துவக் கல்லூரி செயலாளார் ஏ.சி எஸ் அருண்குமார்
முதன்மை கல்வி அதிகாரி வெற்றி செல்வி , மாவட்ட கல்வி அதிகாரி செந்தில்குமார் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி துணைத் தலைவர் இந்திராணி சுப்பிரமணி, மாணவிகளின் பெற்றோர்கள் உள்ளிட்டோர் பலர்
கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய ஏசி சண்முகம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும் மூன்று பள்ளிகளுக்கு இதுவரை
வகுப்பறைகள் கட்டிக் கொடுத்துள்ளோம் .
காஞ்சிபுரம் மாவட்டம் செம்மஞ்சேரியில் ரூ 2 கோடி மதிப்பில். 7 வகுப்பறைகள் ஒரு ஆய்வகம் மற்றும் ஆண்கள மற்றும் பெண்கள் கழிவறைகள் துரைப்பாக்கம் அரசு மேலநிலைப் பள்ளியில் 1.50 கோடி மதிப்பில 7 வகுப்பறைகள் ஒரு ஆய்வகம் இரண்டு கழிவறைகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளன.
மேலும் தற்போது ஸ்ரீபெரும்புதூர்
மகளிர் மேல்நிலைப் பள்ளியில முதல் கட்டமாக ரூ 3.5 கோடி செலவில் பள்ளி கட்டடம் இரண்டு கட்டமாக ரூ.1.5 கோடி செலவில் 7 வகுப்பறைகள் கொண்ட கட்டிடங்களையும் மாணவிகள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது என்றார் ..
மேலும் வேலூர் தொகுதியில் நாடாளுமன்ற தேர்தலில் வேட்பாளராக போட்டியிட உள்ளேன் இப்பொழுதே தொகுதி முழுவதும் பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறேன் . நான் வெற்றி பெற்று என் வெற்றி மாலையை பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கு சமர்ப்பிப்பேன்
மாநில அரசு செய்யும் பல்வேறு நலத்திட்டங்கள்
மத்திய அரசின் நிதி உதவிகளை கொண்டு செயல்படுத்தப்படுகிறது .
ஆனால் மாநில அரசோ எந்த இடத்திலும் மத்திய அரசை முன் நிறுத்துவதில்லை .என்று கூறினார்…
More Stories
JGU and IIT Madras Collaborate to Design Advanced Robot Tour Guide for India’s First Constitution Museum
Shiv Nadar School of Law Inaugurated in Chennai
Olympic Dreams Take Center Stage at HITS: Sporting Legends and Icons Unite for Future Success