கிரிப்டோ கரன்சி மூலம் அதிகம் லாபம் பெற்று தருவேன் என்று கூறி மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு முதலமைச்சரிடமும் டிஜிபி இடமும் ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் அருண்குமார் கோரிக்கை
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள ரிப்போர்ட்டர்ஸ் கில்டில், கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் அருண்குமார் என்பவர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியது.
கிரிப்டோ கரன்சி மூலம் அதிகம் லாபம் பெறலாம் என்று ஆசை வார்த்தை கூறி நந்தகுமார் மற்றும் அவரது நண்பர்களான சங்கர், பிரகாஷ், சீனிவாசன் ஆகியோர் ஆசை வார்த்தைகளை கூறி தன்னுடைய சொந்த அலுவலகத்தில், யூனிவர் காயின் லிமிடெட் என்ற நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி பல மடங்கு லாபங்களை சம்பாதித்து அதிலிருந்து நிறைய முதலீட்டாளர்களிடமிருந்து பணங்களையும் பெற்று தற்போது அந்த நிறுவனத்தில் இருந்து இந்த நான்கு பேரும் தன்னை ஏமாற்றியதாகவும் இதனால் முதலீடு செய்தவர்கள் முழு பணத்தை கொடுக்குமாறும் வற்புறுத்துவதாகும். தனக்கு வரவேண்டிய பங்கு இதுவரையும் கொடுக்கவில்லை என்றும் அவர்கள் தரவேண்டிய முழு தொகையும் அந்த நான்கு பேரிடமிருந்து பெற்று தரக் கோரி டிஜிபி அலுவலகத்தில் புகார் கொடுத்திருப்பதாகவும் முதலமைச்சரின் நேரடி தொலைபேசி எண்ணிற்கும் இது குறித்து புகார் தெரிவித்துள்ளதாகவும் முதலமைச்சரிடம், டிஜிபி சைலேந்திர பாபு இடமும் கோரிக்கை வைப்பதாக தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து பொதுமக்கள் கிரிப்டோ கரன்சி மூலம் முதலீடு செய்யும் முன் அனுபவம் உள்ளவர்களை பலமுறை கேட்டு அதன்பின் முதலீடுகளை தொடங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
பேட்டி – அருண்குமார் (ரியல் எஸ்டேட் தொழில்)
More Stories
సూర్యకాంతం నటన అనితరసాథ్యం- నటి పద్మిని వ్యాఖ్య
உலக தியான தினம் குறித்த முக்கிய உரை நாளை இந்திய நேரப்படி இரவு எட்டு மணி அளவில் நிகழ்த்த உள்ளது
NATIONAL OPEN ROTARY PARA TABLE TENNIS TOURNAMENT – SEASON3