November 15, 2024

சென்னையின் புதிய அடையாளம் காப்பி ரெடி

சென்னை செப்டம்பர் 2022:

சென்னை டி.நகர் டாக்டர்.நாயர் ரோட்டில் உள்ள அம்பிகா சூப்பர் மார்க்கெட் எதிரில் ‘காபி ரெடி’ என்ற காபி கடை திறக்கப்பட்டுள்ளது.

கோவையை மையமாக கொண்டு இந்த காபி ரெடி கடை செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் தற்போது 30 க்கும் மேற்பட்ட கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது.

சென்னையில் தற்போது காபி ரெடி கடையின் முதல் கிளை துவங்கியுள்ளது. இந்த கிளையை ஹெச்.பி.சி.எல் நிறுவனத்தின் சென்னை மண்டல துணை பொது மேலாளர் எஸ்.கே. முரளி அவர்கள் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்.

இதனை தொடர்ந்து காபி ரெடி நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி ராஜேஷ் மற்றும் சென்னை கிளையின் உரிமையாளர் கணேஷ் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறுகையில், கோவையை தலைமை இடமாக கொண்டு செயல்படும் எங்கள் காப்பி ரெடி கடை, கொரோனா காலத்தில் துவங்கப்பட்டது. கோவையில் 35 கிளைகளுடன் செயல்படும் காப்பி ரெடி தர்போது சென்னையில் முதல் கிளையை துவங்கியுள்ளோம். ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் உடன் இணைந்து ஹெச்.பி பெட்ரோல் பங்குகளில் காபி ரெடி கடை அமைக்கப்பட உள்ளது.எங்கள் எஸ்டேட்திலிருந்து 10 நாட்களுக்குள் காப்பி பீன்ஸ்கள் எங்களுக்கு கிடைக்கும். அதனால் அதன் சுவை மற்றும் தரம் என்றும் மாறாது. ஒரு பில்டர் காப்பியின் விலை 20 ஆகும். சென்னியில் வேறு எங்கிலும் இந்த விலைக்கு பில்டர் காப்பி கிடைப்பதில்லை.சென்னையில் மட்டும் மொத்தம் 200 கடைகள் திறக்க முடிவு செய்துள்ளோம். அடுத்த ஒரு ஆண்டுக்குள் 50 கடைகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றனர்.

About Author