மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அய்யா அப்துல்கலாம் அவர்களின் வழியில், இணையதளத்தை, விண்வெளி கனவுமெய்படும் வெற்றித்தளமாக்கிய இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் முன்னாள் விஞ்ஞானி பத்மஸ்ரீ, பத்மபூஷன் டாக்டர்ஏ.சிவதாணுபிள்ளை அவர்களின் தலைமையில்
இளம் விஞ்ஞானிகள் ரஷ்யபயணம்
11 மாவட்டங்களின், 25 அரசுப்பள்ளிகளைச் சேர்ந்த 50 மாணவர்களின் ரஷ்ய விண்வெளி ஏவுதளத்தை நோக்கிய அறிவியல் கல்விபயணம்
11 மாவட்டங்களின், 25 அரசுப்பள்ளிகளைச் சேர்ந்த 50 மாணவர்கள் ரஷ்ய விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு பயணம்
மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் அய்யா அப்துல்கலாம் அவர்களின் வழியில், இணையதளத்தை, விண்வெளி கனவுமெய்படும் வெற்றித்தளமாக்கிய இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் முன்னாள் விஞ்ஞானி பத்மஸ்ரீ, பத்மபூஷன் டாக்டர்ஏ.சிவதாணுபிள்ளை அவர்களின் தலைமையில் 11 மாவட்டங்களின், 25 அரசுப்பள்ளிகளைச் சேர்ந்த 50 மாணவர்கள் 03.09.2023 அன்று ரஷ்யவிண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு அறிவியல் கல்விபயணம் மேற்கொள்கின்றனர்.
கல்வித்துறையில் அதிமுக்கியத்துவம் வாய்ந்தது அறிவியல் முறையிலான கல்வி மற்றும் அனுபவ அடிப்படையிலான கற்றல், நாட்டில் புதியகண்டுபிடிப்பு
கலாச்சராத்தை மாணவர்களிடையே ஊக்குவித்தல், வியப்பூட்டும் விண்வெளி அரங்கம் தொடர்பான துறைகளில் மாணவர்களுக்குப் பயிற்சி அளித்தல் இவையே செய்து கற்றல் முறையில் (Practical Knowledge), விண்ணியல் கல்வியில் விண்வெளிக்கலன்
வடிவமைத்தல், உருவாக்குதல், தயாரித்தல், ஒருங்கிணைத்தல்,
சோதனைக்குட்படுத்துதல், தொடங்குதல் மற்றும் கண்காணித்தல் போன்றவற்றை மாணவர்களுக்கு கற்பிப்பதை நோக்கமாக கொண்டு, சென்னை, அகத்தியம் அறக்கட்டளை மற்றும் URSAGO SOLLUTIONS சார்பில், கொரானா பெருந்தொற்று பேரிடர்காலத்தில் அரசுப்பள்ளி மாணவர்கள் பெருந்துன்பத்தில் விழுந்துவிடாமலும், 13 முதல் 18 வயதுடைய இளம்மாணவர்கள் வலைதளங்களிலும், செல்லிடப்பேசிகளில் சிக்கிவிடாமலும் விண்ணிலை வியந்து பார்க்கவைக்க ” சந்திரமண்டலத்தில் கீண்டு தெளிவோம்” என்ற தலைப்பில் ZOOM செயலி வழியாக ஏவுகலன் அறிவியல் கல்வி வகுப்பினை நடத்த பத்மஸ்ரீ, பத்மபூஷன் டாக்டர்ஏ.சிவதாணுபிள்ளை அவர்களின் தலைமையில் 26.01.2022 அன்று தொடங்கியது.
முதற்கட்டமாக தமிழ்நாட்டைச் சேர்ந்த 500 அரசுப்பள்ளி மாணவர்கள் பங்குபெற அழைப்புவிடுத்தது. இதில் 29 மாவட்டங்களின், 67 அரசுபள்ளி மாணவர்களுக்கு பத்மஸ்ரீ பத்மபூஷன் டாக்டர்ஏ.சிவதாணுபிள்ளை அவர்கள் தலைமையில் தினந்தோறும் மாலை 6 மணிமுதல் 8.30 மணிவரை இணையவழி வகுப்புகளும்,8.30 மணிமுதல் 9 மணிவரை மாணவர்களுக்கு அய்யா அவர்கள் மாணவர்களின் விண்ணியல் சார்ந்த சந்தேகங்களை தீர்த்து வைப்பதற்கான கேள்வி நேரங்கள் நிகழ்ச்சியும் நடைபெற்றன. முதற்கட்டபயிற்சியின் நிறைவுவிழா 02.04.2022 அன்று சென்னை, அண்ணா பல்கலைகழக அரங்கத்தில் துணைவேந்தர் டாக்டல்வேல்ராஜ் அவர்கள் தலைமையிலும், பள்ளிக்கல்வி ஆணையர்திரு.நந்தகுமார். இ.ஆ.ப., அவர்களின் முன்னிலையிலும், டாக்டர் ஏ.சிவதாணுபிள்ளை அவர்களின் வாழ்த்துரையுடனும் சிறப்பாக நடைபெற்றது.
இரண்டாம் கட்டப்பயிற்சி வகுப்பில் 220 மாணவர்கள் கலந்துகொண்டனர். தொடர் வருகைப்பதிவும், இணைய வழித்தேர்வுகளும், வினாவிடை நேரங்களும் 127 மாணவர்களை மூன்றாம் கட்டத்திற்கு தேர்வு செய்தன. மூன்றாம் கட்டத்தின் “அ” பிரிவில் நான்கு சிந்தனைத் தளங்களுக்கான செயல்திட்டப்பகுதி, அதன் செயலாக்கங்களும் மாதிரிகளும் கோயம்புத்தூர் KPRIET கல்லூரி அரங்கில் 04.02.2023 அன்று கல்லூரி முதல்வர் முனைவர் அகிலா அவர்களின் தலைமையில் 13நடுவர் குழு முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது. அரசுப்பள்ளி மாணவர்களில் 75 தேர்ந்த விஞ்ஞானிகள் அந்நிகழ்வில் தேர்வுசெய்யப்பட்டனர். மூன்றாம் கட்டத்தின் ஆ ” பிரிவில் டாக்டர் ஏ.சிவதாணுபிள்ளை அவர்களால் 75 மாணவர்களுக்கும் Ideathon, Rapid Quiz, Visionary thinking போன்ற தலைப்புகளில் பயிற்சி வழங்கப்பட்டது.
நான்காம்கட்டத்திற்கு தேர்வான இந்த மாணவர்களின் வெற்றி இலக்கு ரஷ்ய விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு அறிவியல் பயணம்.75 மாணவர்களின் தற்போது 50 மாணவர்களுடன், ஆகியவர்கள் அடங்கியகுழு 30.09.2023 அன்று ரஷ்ய விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு பயணம் மேற்கொள்கின்றனர்.
இம்மாணவர்களுக்கும், குழுவினருக்கும் பாராட்டு விழா மாண்புகு சுற்றுச்சூழல்துறை அமைச்சர் திரு.மெய்யநாதன்அவர்கள் தலைமையில் இன்று (28.09.2023) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முன்னாள் தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, இந்திய விண்வெளி ஆராய்ச்சிமையத்தின் முன்னாள் விஞ்ஞானி பத்மஸ்ரீ, பத்மபூஷன் டாக்டர் ஏ.சிவதாணுபிள்ளை, அகத்தியம்
அறக்கட்டளை மற்றும் URSAGO SOLLUTIONS, இந்தியா பொறியாளர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் மற்றும் மாணவர்களின் ஆசிரியர்கள், பெற்றோர்கள், நண்பர்கள் கலந்துகொண்டனர்.
More Stories
SRM Institute of Hotel Management, Ekkatuthaangal Campus has achieved Nova World Record by preparing 2025 multi-grain, plant-based Kathi rolls.
Excellence Day 2025 91.87% of Satyabhama students have received their placement orders, Highest package is 41.20 LPA
“₹12,000 Lakh Crore Economic Benefit Projected with ‘One Nation, One Election’”: Nirmala Sitharaman Addresses SRMIST Community