March 7, 2026

32 ஆரோக்கிய சேவா மையங்களைத் தொடங்கும்ஸ்டார் ஹெல்த் ; ஒரு மில்லியனுக்கும் அதிகமானவர்களுக்குஆரம்ப சுகாதார சேவை!

சென்னை 23 பிப்ரவரி 2026: இந்தியாவின் முன்னணி தனிப்பட்டஆரோக்கிய காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றான ஸ்டார் ஹெல்த்அண்ட் அலைட் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் (NSE: STARHEALTH; BSE: 543412) நிறுவமனமானது CSR திட்டத்தின்கீழ் 9 மாநிலங்களில் 32 ஆரோக்கிய சேவா கேந்திராக்களை(ASK) திங்கள்கிழமை அன்று அறிமுகப்படுத்தியது. போதியமருத்துவ வசதிகள் இல்லாத மற்றும் வளர்ந்து வரும் நகர்ப்புறமாவட்டங்களில் சமூக அளவிலான முதன்மை சுகாதார அணுகலைவலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்த நடவடிக்கைமேற்கொள்ளப்பட்டுள்ளது.

பிரமிள் அறக்கட்டளையின் (Piramal Foundation) ஒரு அங்கமானபிரமிள் ஸ்வஸ்த்யா (Piramal Swasthya) அமைப்புடன் இணைந்துசெயல்படுத்தப்படும் இந்த சுகாதார மையங்களானது மருத்துவர்ஆலோசனைகள், தொற்றா நோய்களுக்கான (NCDs) பரிசோதனைகள், அடிப்படை நோயறிதல் சோதனைகள், இலவசமருந்துகள், ஆலோசனைகள் மற்றும் தகுதியுள்ள பயனாளிகளுக்குநிமோகோக்கல் தடுப்பூசி (Pneumococcal vaccination) வழங்குதல்உள்ளிட்ட முதன்மை சிகிச்சை சேவைகளை வழங்க திட்டம். இந்தஆரோக்கிய ஸ்வஸ்த்யா கேந்திராக்கள் கர்நாடகாவின் மைசூரு, ஹூப்பள்ளி, பெலகாவி, தாவணகெரே மற்றும் பல்லாரி; தமிழ்நாட்டின் நாகர்கோவில், தூத்துக்குடி, திருப்பூர், சென்னைமற்றும் கரூர்; தெலங்கானாவின் நிஜாமாபாத், கம்மம், கரீம்நகர்மற்றும் மகபூப்நகர்; ஆந்திரப் பிரதேசத்தின் கர்நூல் மற்றும்விசாகப்பட்டினம்; ஒடிசாவின் ரூர்கேலா மற்றும் பெர்ஹாம்பூர்; பஞ்சாபின் பதிண்டா, அமிர்தசரஸ் மற்றும் பாட்டியா; உத்தரப்பிரதேசத்தின் கோரக்பூர், மதுரா, பிரயாக்ராஜ் மற்றும் அலிகார்; மேற்கு வங்கத்தின் அசன்சோல் மற்றும் சிலிகுரி; மற்றும்மகாராஷ்டிராவின் நாசிக், கோலாப்பூர், சாங்லி, சதாரா மற்றும்அகோலா ஆகிய முக்கிய நகரங்களில் தொடங்கப்பட உள்ளன.

இந்தியா மக்கள் தொடர்ந்து உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவுநோயினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதில்பெரும்பாலானோருக்கு நோயின் தீவிரம் அதிகரித்து சிக்கல்கள்ஏற்படும் வரை கண்டறியப்படாமலேயே உள்ளன. இந்தத்திட்டத்தில் பங்கேற்கும் ஒன்பது மாநிலங்களில் உள்ளமாவட்டங்களில், பெரியவர்களிடையே உயர் இரத்த அழுத்தபாதிப்பு சுமார் 20% முதல் 40%-க்கும் அதிகமாக உள்ளது, மேலும்சில குறிப்பிட்ட பகுதிகளில் நீரிழிவு நோயின் பாதிப்பு கிட்டத்தட்ட29% வரை எட்டியுள்ளது.

ஸ்டார் ஹெல்த் அண்ட் அலைட் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட்நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் (MD) மற்றும் தலைமைச்செயல் அதிகாரி (CEO) ஆனந்த் ராய் கூறுகையில்இந்தியாவின் சுகாதாரப் பாதுகாப்பு குறித்த தேவைமருத்துவமனையைத் தாண்டி சமூகத்திற்குள் இருந்து தொடங்கவேண்டும்நோய் பாதிப்புகளிலிருந்து மக்களைக் காப்பாற்றஅவர்களை மருத்துவமனையில் அனுமதிப்பது மட்டுமே தீர்வாகாதுவரும் முன் காப்பது போல முதன்மைச் சிகிச்சையே உடல்நலபிரச்னைகளை சரி செய்வதே சரியானது என்று நாங்கள்நம்புகிறோம்.

பரிசோதனைகள்மருந்துகள் மற்றும் தொடர் சிகிச்சைஆகியவை தொடர்ந்து கிடைக்கப்பெறும்போதுநோய்கள்தீவிரமடைந்து பேரழிவை ஏற்படுத்துவதற்கு முன்பே அவைதடுக்கப்படுகின்றனஇந்த அடித்தளத்தை வலுப்படுத்துவதுசுகாதாரக் கட்டமைப்பில் உள்ள அனைத்து நிறுவனங்களின்கூட்டுப் பொறுப்பாகும்எங்களது இந்த சிஎஸ்ஆர் (CSR) முன்முயற்சியின் மூலம்அந்த கூட்டு முயற்சியில் நாங்கள்பங்களிக்கிறோம்மேலும்முதன்மைச் சுகாதாரமானதுமக்களுக்கு ஆரம்பக்கட்டத்திலேயேநம்பகமான முறையில்மற்றும் அவர்கள் வசிக்கும் இடத்திற்கு அருகிலேயே கிடைப்பதைநாங்கள் உறுதி செய்கிறோம்,” என்றார்.

ஆரோக்கிய சேவா கேந்திரா (ASK) வழங்கும் சேவைகள்:

● MBBS மருத்துவர் ஆலோசனைகள்

● உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு மற்றும் ஓரல் ஹெல்த்தொடர்பான பரிசோதனைகள்

● அடிப்படை ஆய்வக நோயறிதல் சோதனைகள் மற்றும்மாதிரிகள் சேகரிப்பு

● சாதாரண நோய்கள் மற்றும் நாட்பட்ட பாதிப்புகளுக்கானஇலவச மருந்துகள்

● சுகாதார ஆலோசனைகள் மற்றும் விழிப்புணர்வு அமர்வுகள்

● தகுதியுள்ள பயனாளிகளுக்கு நிமோகோக்கல் தடுப்பூசி(Pneumococcal vaccination) சேவை

● தேவைப்படும் பட்சத்தில், மேல்நிலை சிகிச்சைக்கானபரிந்துரை இணைப்புகள்

அவ்வப்போது நடத்தப்படும் தற்காலிக மருத்துவ முகாம்களைப்போலல்லாமல், ஆரோக்கிய சேவா கேந்திரா (ASK) மருத்துவமனைகள், அர்ப்பணிக்கப்பட்ட மருத்துவக் குழுக்கள்மற்றும் வரையறுக்கப்பட்ட சேவை நெறிமுறைகளுடன்செயல்படுகின்றன. இது நோயாளிகளுக்கான தொடர்ச்சியானசிகிச்சை மற்றும் முறையான மருத்துவப் பின்தொடர்தல்களை(Follow-up) உறுதி செய்கிறது.

ஸ்டார் ஹெல்த் நிறுவனம் தனது நிறுவன சமூகப் பொறுப்பு (CSR) நிதியின் கீழ், இதற்கான மூலதனம் மற்றும் செயல்பாட்டுச்செலவுகளை வழங்குகிறது; அதேவேளையில், பிரமிள் ஸ்வஸ்த்யாஅமைப்பு இதன் அமலாக்கம், பணியாளர் நியமனம் மற்றும்மருத்துவ நிர்வாகத்தைக் கவனித்துக்கொள்கிறது.

பிரமிள் குழுமத்தின் தலைவர் அஜய் பிரமிள் கூறுகையில்:“கடந்த 17 ஆண்டுகளாக பிரமிள் அறக்கட்டளை இந்தியாவின்மிகவும் சவாலான பகுதிகளில், ஆழமான சமூக ஈடுபாடு மற்றும்சமூக மாற்றங்களுக்காக பணியாற்றியுள்ளது. ஸ்டார் ஹெல்த்இன்சூரன்ஸ் நிறுவனத்துடனான இந்த சிஎஸ்ஆர் (CSR) கூட்டுமுயற்சி அந்த பாரம்பரியத்தை மேலும் வலுப்படுத்துகிறது – நம்பகமான, விரிவான முதன்மை சிகிச்சையை மக்கள் வசிக்கும்பகுதியிலேயே கொண்டு செல்வதன் மூலம், ஆலோசனைகள், நோயறிதல் சோதனைகள் மற்றும் இலவச மருந்துகள் வழியாகபத்து லட்சத்திற்கும் அதிகமான மக்களின் வாழ்வில் மாற்றத்தைஏற்படுத்த முடியும்,” என்றார்.

சுவாச நோய்களின் பாதிப்பிற்கு நிமோகோக்கல் (Pneumococcal) தொற்றுகள் ஒரு முக்கிய காரணியாகத் தொடர்ந்து இருந்துவருகின்றன. இந்த முன்முயற்சியில் ‘அறிவுசார் பங்குதாரராக’ (Knowledge partner) இணைந்துள்ள ஃபைசர் (Pfizer) நிறுவனம், தடுப்பூசி தொடர்பான தனது அறிவாற்றல் மற்றும்நிபுணத்துவத்தின் மூலம் இத்திட்டத்தில் சேவையாற்றஇருக்கிறார்கள்.

ஃபைசர் இந்தியாவின் (Pfizer India) சந்தை அணுகல் இயக்குநர்சரள் குப்தா கூறுகையில்பெரியவர்களுக்கான நோய்த்தடுப்புமுறை (Adult immunization) என்பது இந்தியாவின் தடுப்புசுகாதாரக் கட்டமைப்பில் இன்னும் கவனிக்கப்படாதஅதே சமயம்மிக முக்கியமான அங்கமாக உள்ளதுஉலகளவில் சமூகத்தால்பரவும் நிமோனியா (Community-acquired pneumonia) பாதிப்பில் 23 சதவீதத்தை நமது நாடு கொண்டுள்ளதுஎனவேதடுப்பூசி மூலம்தடுக்கக்கூடிய இத்தகைய நோய்களின் ஒட்டுமொத்ததாக்கத்தைக் குறைக்ககுறிப்பாக அதிக ஆபத்துள்ள நிலையில்உள்ள பெரியவர்களுக்குத் தடுப்பூசி கிடைப்பதை உறுதி செய்வதுமிகவும் அவசியமானது,” என்றார்.

ஸ்டார் ஹெல்த் நிறுவனம்பெரியவர்களுக்கான தடுப்பூசிதிட்டத்தை தங்களின் ஆரோக்கிய சேவா கேந்திராமுன்முயற்சியின் ஒரு அங்கமாக மாற்றியமைத்ததற்கு எங்களதுவாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்எங்களதுநிபுணத்துவத்தின் மூலம் இந்தத் திட்டத்திற்குத் தொடர்ந்துஆதரவளிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.”

இந்த 32 ஆரோக்கிய சேவா கேந்திரா (ASK) மருத்துவமனைகள், 2026 மார்ச் 31-க்குள் சுமார் 60,000 பயனாளிகளுக்குச் சேவைவழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளனமேலும், 2026-27 நிதியாண்டில் 3 லட்சத்திற்கும் அதிகமான பயனாளிகளைச்சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறதுதொற்றா நோய்களின்(NCD) பாதிப்பு அதிகமாக உள்ள மற்றும் முதன்மை சுகாதாரவசதிகள் குறைவாக உள்ள மாவட்டங்களில் இந்தக்கிளினிக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

சென்னையில் தொடங்கப்பட்டுள்ள இந்தத் திட்டம்தடுப்புமுறையிலானஎளிதில் அணுகக்கூடிய மற்றும் தொடர்ச்சியானமுதன்மை சுகாதார சேவையை வழங்குவதை நோக்கமாகக்கொண்ட ஒரு கட்டமைக்கப்பட்டநீண்ட கால சிஎஸ்ஆர் (CSR) முன்முயற்சியின் தொடக்கத்தைக் குறிக்கிறது.

About Author