சென்னை, ஆகஸ்ட் 2024: தேசிய பங்குசந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள ஆஷியானா ஹவுசிங் லிமிடெட், அரிஹந்த் பவுண்டேஷன்ஸ் மற்றும் ஹவுசிங் லிமிடெட் உடன் இணைந்து, ஸ்வரங் என்னும் அதிநவீன முதியோர் குடியிருப்பு திட்டத்தை சென்னையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இது சென்னையில் ஆஷியானாவின் மூன்றாவது முதியோர் குடியிருப்பு கட்டுமான திட்டமாகும். இந்த புதியகுடியிருப்பு திட்டம் சென்னையின் கிழக்கு கடற்கரை சாலையில்அமைந்துள்ள நெம்மேலியில் 10.87 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ளது.
ஓய்வுக்குப் பிறகு வாழ்க்கையை மகிழ்ச்சிகரமாக வாழ விரும்பும் மூத்தகுடிமக்களின் தேவைகளை வழங்குவதற்காக இந்த குடியிருப்புபுகழ்பெற்ற கட்டிடக் கலைஞர்களால், போதுமான காற்றோட்டம் மற்றும்ஏராளமான இயற்கை ஒளியுடன், வசதியான மற்றும் பாதுகாப்பான சூழல்போன்ற அம்சங்களுடன் மிகவும் கவனமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஸ்வரங்கிற்கான நிலப்பரப்பு கட்டிடக்கலை நன்கு அறியப்பட்ட சவிதாபூண்டேவால் செய்யப்பட்டுள்ளது. ஸ்வரங்கின் கட்டுமானப் பணிகள்ஆறு ஆண்டுகளுக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த அதிநவீன திட்டம், நடை கால்பந்து, டென்னிகாய்ட், குரோக்கெட்மற்றும் அக்வா தெரபி போன்ற விளையாட்டு வசதிகள் உட்பட அதன்விரிவான வசதிகளுக்காக தனித்து நிற்கிறது. முழு வசதியுடன் கூடியஉடற்பயிற்சி கூடம், வழிபாட்டு இடம் மற்றும் வழக்கமான சமூகநிகழ்வுகள் ஆகியவை துடிப்பான சமூக வாழ்க்கைக்குபங்களிக்கின்றன. 24 மணிநேரமும் பாதுகாப்பு அலுவலர்கள், செயலிஅடிப்படையிலான வாசற்கதவு மேலாண்மை, சிசிடிவி கேமராக்கள்மற்றும் அவசரகால வெளியேறும் வழி போன்ற பாதுகாப்பு அம்சங்களுடன், ஸ்வரங் அதன் குடியிருப்பாளர்களின் பாதுகாப்புமற்றும் நல்வாழ்வை உறுதி செய்கிறது.
912 முதல் 1462 சதுர அடி வரையிலான 1, 2 மற்றும் 3 படுக்கையறைவீடுகள் மற்றும் ஆடம்பரமான பென்ட்ஹவுஸ்கள் உட்படதேர்ந்தெடுக்கப்பட்ட எண்ணிக்கையிலான பிரத்யேக அலகுகளை இந்தகுடியிருப்பு வழங்கும். இந்த குடியிருப்பு திட்டத்தின் விலை வரம்புஇரண்டு படுக்கையறை வீடு ரூபாய் 84 இலட்சம் முதல் 1.09 கோடிரூபாயாகவும், இரண்டு படுக்கையறை வீடு ரூபாய் 1.22 கோடி முதல் 1.46 கோடி ரூபாயாகவும், மூன்று படுக்கையறை வீடு ரூபாய் 1.55 கோடி முதல்1.75 கோடி ரூபாயாகவும் மற்றும் இரண்டு படுக்கையறை கொண்டபென்ட்ஹவுஸுக்கு ₹2.08 கோடி ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆஷியானா ஹவுசிங் லிமிடெட் நிறுவனத்தின் இணைநிர்வாக இயக்குநர் திரு.அன்குர் குப்தா கூறுகையில், “இந்தியாவில்எங்கள் ஒன்பதாவது முதியோர் வீட்டுத் திட்டமாகவும், சென்னையில்எங்களது மூன்றாவது வீட்டுத் திட்டமாகவும் ஸ்வரங் குடியிருப்புதிட்டத்தை துவங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். ஸ்வரங், நெம்மேலியில் அதன் தனித்துவமான அம்சங்களுடன் சென்னையின்மூத்த குடிமக்களின் வளர்ந்து வரும் குடியிருப்பு தேவைகளைப் பூர்த்திசெய்யும் வகையில் அதிநவீன வகையில் அமைக்கப்பட்டுள்ளது”. என்றுகூறினார்.
அரிஹந்த் பவுண்டேஷன்ஸ் மற்றும் ஹவுசிங் லிமிடெட் இயக்குனர் திரு. பாரத் ஜெயின் கூறுகையில், “ஸ்வரங்கின் துவக்கமானது ஆஷியானாஹவுசிங்குடன் இணைந்து செயல்படுவதில் ஒரு குறிப்பிடத்தக்கமைல்கல் ஆகும். சென்னையில் உயர்வகுப்பு மூத்த குடிமக்களின்அதிகரித்து வரும் குடியிருப்பு தேவையை நிவர்த்தி செய்வதில் நாங்கள்அர்ப்பணிப்புடன் செயலாற்றி வருகிறோம். ” என்று கூறினார்.
இந்தியாவின் மூத்த குடிமக்கள் தொகை அடுத்த 10-12 ஆண்டுகளில் 150 மில்லியனிலிருந்து 230 மில்லியனாக உயரும் என கணிக்கப்பட்டுள்ளது. 2050 ஆம் ஆண்டு அளவில், இந்தியா 340 மில்லியன் முதியோர்களின்தாயகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது உலகமுதியோர் மக்கள் தொகையில் சுமார் 17% ஆகும். இந்த மக்கள்தொகைமாற்றம் விரிவான மூத்த வாழ்க்கைத் தீர்வுகளின் அவசியத்தைஅடிக்கோடிட்டுக் காட்டுகிறது. தென்னிந்தியாவில் ஒழுங்கமைக்கப்பட்டஉதவி வாழ்க்கைப் பிரிவில் சுமார் 74% பங்களிப்பு மூலம் மூத்தகுடிமக்கள் வாழ்க்கைத் திட்டங்களுக்கான முக்கிய மையமாக சென்னைமாறியுள்ளது. பெங்களூரு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய நகரங்களுடன்சேர்ந்து, இந்த தேவையை பூர்த்தி செய்வதில் சென்னை முக்கிய பங்குவகிக்கிறது, இது மலிவு விலை, தனி குடும்ப அமைப்புகளைஏற்றுக்கொள்வது மற்றும் பயிற்சி பெற்ற சுகாதார ஊழியர்களின் இருப்புபோன்ற காரணிகளால் இயக்கப்படுகிறது.
ட்ராக்2 ரியாலிட்டி மூலம் இந்தியாவின் முதன்மை மூத்த மக்கள்குடியிருப்பு நிறுவனமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள ஆஷியானாஹவுசிங்கின் டெல்லியின் பிவாடி, சென்னையின் லவாசா மற்றும்புனேவில் 2500க்கும் மேற்பட்ட மூத்த குடிமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிறுவனம் 2023-24 நிதியாண்டில், நிறுவனம் ₹1,800 கோடி வருவாய்ஈட்டியது, நடப்பு நிதியாண்டில் ₹2,000 கோடியை எட்டும் எனஎதிர்பார்க்கப்படுகிறது.
More Stories
LG Electronics India Recognized as ‘Great Place to Work’ for the Second Consecutive Year
JSW MG Motor India Delivers 101 MG Windsor in a Single Day
Avtar Awards IBM Leader the 2024 Male Ally Legacy Award and Bosch Limited the Social Excellence Award