சென்னை செம்மஞ்சேரியில் உள்ள சத்தியபாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிகர்நிலை பல்கலைகழகத்தின் 33வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
பல்கலைக்கழகத்தின் வேந்தர் மரியஜீனா ஜான்சன் மற்றும் தலைவர் மரிய ஜான்சன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக அமெரிக்க மோட்ராக் நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி அஷ்வின் ராஜா கலந்து கொண்டு மாணவர்களிடையே சிறப்புரையாற்றினார்.
உடன் பல்கலைகழகத்தின் துணைத் தலைவர்கள் அருள் செல்வன், மரியா கேத்தரின் ஜான்சன் ஆகியோர் பங்கேற்றனர்.
33 வது பட்டமளிப்பு விழாவில், சத்தியபாமா பல்கலைக்கழகத்தின் 3508 இளங்கலை பட்டதாரி மாணவர்களுக்கும், 644 முதுநிலை பட்டதாரி மாணவர்களுக்கும், 122 பிஎச்டி மாணவர்களுக்கு டாக்டர் பட்டத்தை பல்கலைக்கழகத்தின் வேந்தர் மரியஜீனா ஜான்சன் மற்றும் அமெரிக்க மோட்ராக் நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி அஷ்வின் ராஜா ஆகியோர் வழங்கினர்.
சாதனை மாணவர்கள் 45 பேருக்கு தங்க மெடல்கள் என மொத்தம் 4152 மாணவர்களுக்கு சத்யபாமா பல்கலைக்கழகத்தில் பட்டங்கள் வழங்கப்பட்டது.
வேலை வாய்ப்பு :-
சத்தியபாமா தொடர்ந்து கேம்பஸ் தேர்வில் அதிகபட்ச மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு பெற்று தருகிறது.
இந்த ஆண்டு பெரிய சாதனையாக இரு மாணவர்களுக்கு ஆண்டுக்கு தலா 50,00,000 ஊதியம் என இதுபோன்று 3502 மாணவர்களுக்கு வேலைக்கான ஆர்டர்களை பெற்றுத் தந்துள்ளது.
சத்யபாமா பல்கலைக்கழகத்தில் 2023- 2024 கல்வி ஆண்டில் 417 நிறுவனங்கள் கேம்பஸ் இன்டர்வியூ நடத்தின. இதில் மொத்த மாணவர்களில் 92.72% மாணவர்கள் வேலை வாய்ப்பு பெற்றனர். இந்த மாணவர்கள் ஆண்டுக்கு சராசரியாக குறைந்தபட்சம் ரூ.5.75 லட்சமும் அதிகபட்சமாக ஆண்டுக்கு ரூ.50 லட்சமும் சம்பளமாக பெற உள்ளனர்.
More Stories
SRM Tamil Perayam Conducts ‘Sol Tamizha Sol 2025’ in Chennai
Sree Balaji Dental College and Hospital Hosts Momentous Graduation Ceremony for the 31st Batch
14th Convocation held at B.S.Abdur Rahman Crescent Institute of Science and Technology