December 22, 2024

உயர் நீதிமன்ற உத்தரவு இருந்தும்- அமைச்சர்தலையிட்டால் நீர் நிலை ஆக்கிரமிப்பை அகற்ற முடியவில்லை

சென்னையில் சுப்பிரமணி -ஹேமா மாலனி தம்பதியினர் பொதுநல வழக்கு ஒன்றை திருவண்ணா
மலை மாவட்டம் கோ. நாச்சிப்பட்டு நீர் நிலையில் 61 வீடுகளை கட்டி உள்ளார்கள் என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடுத்தனர்.
வழக்கை விசாரிக்க சென்னை உயர் நீதிமன்ற நீதியரசர் உடனடியாக ஆகரிப்பை அகற்ற உத்தரவிட்ட நிலையில்
பி டி ஓ பிரித்ராஜ் ஆக்கிரமிப்பை அகற்றாமல் காலதாமதம் செய்தார். இந்நிலையில் நீதிமன்ற அவமதிப்பு என்ற பெயரில் நீதிபதிகள் மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் துறை அலுவலர், தாசில்தார்,
பி டி ஓ ஆகியோருக்கு நீதிமன்ற அவமதிப்பில் உங்களை தண்டிக்கலாம் என்று கூறிய நிலையிலும் அவர்கள் இதைப் பற்றி எதையும் கண்டு கொள்ளவில்லை.
இந்நிலையில் பொதுநல வழக்கு கொடுத்த சுப்பிரமணி-ஹேமா மாலினி ஆகியோர் தாசில்தார் பிடிஓ ஆகியோரை அனுகிய
போது தற்போது ஆகரமிப்பை அகற்ற போதிய அளவில் திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலையத்தில் காவலர்கள் இல்லை என்று கூறி விட்டார்கள். மேலும் திருவண்ணா
மலை ஒன்றிய செயலாளர் மெய்யூர் சந்திரன் எங்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததும் இன்றிநீங்கள் அமைச்சர் சந்திக்க வேண்டும், உங்களை வரச் சொல்லி உள்ளார் என்று கூறினார்.அதன் அடிப்படையில் நாங்கள் சென்றபோது அமைச்சர் சந்திக்க இயலவில்லை. இந்நிலையில் வழக்கு தொடர்பாக முதல்வருக்கு மனு அளித்து உள்ளோம் அத்துடன் முதல்வர் தனி பிரிவில் நேரடியாகவே மனு கொடுத்துள்ளோம். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர் பாண்டியன் மற்றும் தற்போதைய ஆட்சியர் முருகேசன் அவர்களிடம் நேரில் சந்தித்து மனு அளித்தும் இருந்தும் எந்த பயனும் இல்லை. தமிழக முழுவதும் நீர்நிலை ஆகரிப்புகளை அகற்றி விட்டோம் என்று தமிழக அரசு கூறி வரும் நிலையில் முக்கிய இலாகாவை வைத்துள்ள அமைச்சர் இது போன்ற செயல்களுக்கு உறுதுணையாகஇருப்பது வருந்ததக்கதாகஉள்ளது.நீர்நிலையில் வீடு
கட்டியவர்களுக்கு
மாற்று இடமாக கொளக் குடியில் இடம் அளித்தும் செல்லாமல்உள்ளார்கள்.இதற்கு காரணம் அரசியல் தலையீடும்,
பிடிஓவும் உள்ளார்கள்.
இந்நிலையில் எங்கள் உயிருக்கு ஆபத்து உண்டானால் அதற்கு முழு பொறுப்பும் அமைச்சர் தான் என்று கூறினர்.

About Author