November 21, 2024

டாஸ்மாக் கடையில் பாட்டிலுக்கு 10 ரூபாய்க்கு மேல் வசூல் செய்தால் பணிபுரியும் அனைவரும் தற்காலிக பணியிடை நீக்கம்

டாஸ்மாக் கடையில் பாட்டிலுக்கு 10 ரூபாய்க்கு மேல் வசூல் செய்தால் கடையில் பணிபுரியும் அனைவரும் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள் என்ற சுற்றறிக்கையை தமிழ்நாடு அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் எனவும்

வருடத்திற்கு 50,000 முதல் 60,000 கோடி அரசின் கஜானாவை நிரப்பும் டாஸ்மாக் ஊழியர்களின் சம்பளம் மிகக் குறைவாக உள்ளதாகவும் தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள் நலச்சங்க தலைவர் பாரதி பேட்டி

20 ஆண்டு காலமாக டாஸ்மாக் கடைகளில் பணிபுரியும் பணியாளர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்திட வேண்டியும், டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு முறையான நிலையாணை உடனடியாக உருவாக்கிட வேண்டியும் டாஸ்மாக் விற்பனையாளர்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையை திரும்ப பெற வேண்டியும் தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள் நல சங்கம் சார்பில் தமிழ்நாடு அரசை கண்டித்து சென்னை எழும்பூரில் 100 க்கும் மேற்பட்ட டாஸ்மாக் விற்பனையாளர்கள் தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள் நலச்சங்க தலைவர் பாரதி தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள் நலச் சங்கத் தலைவர் பாரதி

டாஸ்மாக் விற்பனையாளர் நல சங்கத் தலைவர் பாரதி செய்தியாளர் சந்திப்பு

கொட்டும் மழையிலும் நாங்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம்.டாஸ்மாக் நிர்வாகத்தில் இருந்து சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்த சுற்றறிக்கையில் டாஸ்மாக் கடையில் பாட்டிலுக்கு பத்து ரூபாய்க்கு மேல் விற்பனை செய்தால் கடையில் உள்ள அனைவரும் தற்காலிக பணியிடை நீக்கம் என அறிவித்துள்ளார்கள். இது ஆங்கிலேயர்களின் கால தண்டனை போல உள்ளது. இதை ஏற்றுக் கொள்ள முடியாது.

தமிழ்நாட்டிற்கு தீபாவளி நேரத்தில் 800 முதல் 1000 கோடி வரை டாஸ்மாக் கடைகள் மூலம் வருமானம் வருவதாகவும்,
வருடத்திற்கு 50,000 முதல் 60,000 கோடி அரசின் கஜானாவை நிரப்பும் டாஸ்மாக் ஊழியர்களின் சம்பளம் மிகக் குறைவாக உள்ளது.ஒருவர் தவறு செய்தால் அனைவருக்குமே தண்டனை என்பது முழுமையாக தவறானது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளோம். வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. நவம்பர் 29 ஆம் தேதி டாஸ்மாக் நிர்வாகம் நேரில் வந்து ஆஜராகி , விளக்கம் வழங்க வேண்டும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
டாஸ்மாக் கடைகளில் பணிபுரியும் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யும் வரை எங்களின் போராட்டம் தொடரும் என தெரிவித்தார்.

About Author