November 21, 2024

பாலிசிதாரை பாதிக்கும் காப்பீட்டின் மீதான ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை

பல்வேறு முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய எல்ஐசி முகவர் சங்கம் லிகாய் சார்பில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் சங்கத்தின் சென்னை கோட்டம் தலைவர் எம் ராஜேந்திரன் தலைமையில் மாபெரும் தர்ணா போராட்டம் நடைபெற்றது இந்த போராட்டத்தில் சிஐடியுவின் மாநில தலைவர் எ சௌந்தரராஜன் கலந்துகொண்டு இவர்களுடைய முக்கிய கோரிக்கையான முகவர்களுக்கான புதிய கமிஷன் ரத்து செய்து பழைய நிலையிலேயே நடைமுறைப்படுத்த வேண்டும் குறைந்தபட்ச காப்புத் தொகையை ஒரு லட்சமாக குறைத்திட வேண்டும் மேலும் பாலிசி எடுப்பதற்கான அதிகபட்ச நுழைவு வயதை அனைத்து திட்டங்களுக்கும் 65 ஆக உயர்த்திட வேண்டும் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள சி எல் ஏ டபுள்யூ பி ஏ சி கே கமிஷனை திரும்ப பெறுதல் முறையை நீக்கிட வேண்டும் பாலிசிதாரை பாதிக்கும் காப்பீட்டின் மீதான ஜி எஸ் டி வரியை ரத்து செய்ய வேண்டும் பாலிசிதாரருக்கான போனஸ் தொகையை அதிகப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை வலியுறுத்தி இந்த மாபெரும் கர்ணா போராட்டம் நடைபெற்றதாக தெரிவித்தனர் மேலும் இந்த தர்ணா போராட்டத்தில் சங்கத்தின் சென்னை கோட்ட பொதுச் செயலாளர் டி கே வெங்கடேசன் எஸ் ரமேஷ் குமார் ஆர் சர்வமங்களா எஸ் ஏ கலாம் ஏ பூவலிங்கம் ஜி ராஜேஷ் உள்ளிட்ட சங்கத்தின் முக்கிய பொறுப்பாளர்கள் உறுப்பினர்கள் என ஆயிரத்திற்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

About Author