சென்னை , இந்தியா – நவம்பர் 2024
சென்னையைத் தலைமையகமாக கொண்ட , முன்னணி சுற்றுச்சூழல் மேலாண்மை மற்றும் தண்ணீர் சுத்திகரிப்பு நிறுவனமான ஹூபர்ட் என்விரோ கேர் சிஸ்டம்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனமும் கடல்சார் துறையிலும் துறைமுக கட்டுமானத்திலும் புகழ்பெற்ற கொரிய நாட்டு நிறுவனமான யுஜூ கோ லிமிடெட் நிறுவனமும் இணைந்து ஆக்கப்பூர்வமான கூட்டாளித்துவத்தை அறிவித்துள்ளனர். இந்த கூட்டுறவானது , உலகில் முதன்முறையாக , கடல் சீற்றத்திற்கும் கடல் அரித்தலுக்கும் தீர்வாக , டிசெல் எனப்படும் தொழில்நுட்பத்தை உருவாக்கிய யுஜூ நிறுவனத்துடன் இணைந்து அத்தகைய தொழில்நுட்பத்தின் மூலமாக, இந்தியாவில் கடலோரப் பகுதிகளை மேற்கொள்ளும் முயற்சிகளை மேற்கொள்ள ஏதுவாக இந்த ஆண்டு அக்டோபர் மாதம் உருவாக்கப்பட்டது.
உலகெங்கிலும் கடல் அரித்தல் என்பது கவலைக்குரிய அம்சமாக இருப்பதாலும் கூடவே பருவ நிலை மாற்றம் மற்றும் கடல் மட்டங்கள் உயர்ந்து வருதல் குறித்து பேசப்பட்டு வருவதாலும் கடலோர சமூகங்கள் , சூழலியல் , மீன் வளம் மற்றும் சுற்றுலாத் துறை ஆகியவற்றைப் பாதுகாக்க ஏதுவான புத்தாக்க தீர்வுகளை வழங்குவதற்காக , எச்இசிஎஸ் நிறுவனமும் யுஜூ நிறுவனமும் கைகோர்த்த்து செயல்படுகின்றன. . “ உங்கள் கடலோரங்களைக் கவனித்துப் பாதுகாத்தல் – டிசெல் எனப்படும் தொழில்நுட்ப பயன்பாட்டுடன் கூடிய ஓர் உலகத் தரம் வாய்ந்த கடலோர கட்டமைப்பு ” என்கிற தலைப்பிலான இரு நிறுவனங்களும் இணைந்து நடத்திய உயர் தொழில் நுட்ப ரீதியான கருத்தரங்கை நடத்தின. , டிசெல் எனப்படும் தொழில்நுட்பத்தின் சிறப்பியல்புகள் பற்றியும் அதனை இந்தியாவில் கடல் அரித்தலைக் கட்டுபடுத்தப் பயன்படுத்துவது பற்றியும் இந்தக் கருத்தரங்கில் விரிவாக விவாதிக்கப்பட்டது.
கருதரங்கத்தின் முக்கிய அம்சங்களாவன –
தமிழ்நாடு க்ரீன் கிளைமேட் கம்பெனியின் ஆலோசகரும் கடலோர மேலாண்மை நிறுவனமான NCSCM ன் நிறவனர் – இயக்குநருமான பேராசாரியர் டாக்டர் . ரமேஷ் ராமச்சந்திரன் அவர்கள் கருத்தரங்கைத் தொடக்கி வைத்து குழுமி இருந்தோர் இடையே தொடக்க உரை ஆற்றினார். அவர் தமது உரையில் , கடலோர அரித்தல் மற்றும் கடல் மட்டங்கள் உயர்தல் அதிகரித்து வருவதன் காரணமாக , செயல்திறன் மிக்க கடலோரப் பாதுகாப்புத் தீர்வுகளைக் கண்டறிய வேண்டியது இன்றைய அவசர தேவையாக உள்ளது என்று கூறினார். அவர் , மேலும் பேசுகையில் , இந்தியாவின் கடலோரப் பகுதிகளைப் பேணிப் பாதுகாத்திட புத்தாக்க , நிரந்தர தீர்வுகளை உருவாக்கி கடலோரப் பகுதிகளைப் பேணிப் பாதுகாத்து நாளைய தலைமுறையினரிடம் ஒப்படைக்க வேண்டிய அவசியத்தை எடுத்துரைத்தார்.
இந்த தொழில்நுட்பக் கருத்தரங்கில் , யுஜூ நிறுவனத்தின் செயல் அதிகாரி – டாக்டர் . சேங் கி கிம் அவர்கள் , நிகழ்வின் முக்கிய சிறப்புரையை ஆற்றினார். அவர் டிசெல் எனப்படும் தொழில்நுட்பம் குறித்து விரிவாக எடுத்துக் கூறி கடல் சீற்றத்தையும் கடலோரம் அரித்துப் போதலையும் தடுப்பதற்கான அதிநவீன தீர்வு என்பதையும் விவரித்தார். அவர் மேலும் கூறுகையில் , இந்தியாவில் கடலோரப் பகுதிகளில் , நாட்டின் எதிர்கால புதுப்பிக்கத்தக்க ஆற்றல்களுக்கு இன்றியாமையாத ஒன்றாக இருக்கப் போகிற காற்றாலை மின்சார ஆலைகளை நிலைநாட்டுவதில் டிசெல் எனப்படும் தொழில்நுட்பத்தின் பயன்பாடு குறித்து விளக்கினார் .
இந்தக் கருத்தரங்கில் , சென்னை ஐஐடி நிறுவனத்தின் பெருங்கடல் பொறியியல் துறையின் பேராசிரியர் டாக்டர் . கே.ஜி .விஜய் அவர்கள் .
கலந்து கொண்டு இந்திய கடலோரங்களில் கட்டமைப்புகளையும் உப்பங்கழி எனப்படும் பேக் வாட்டர்ஸ் பாதுகாத்தல் குறித்த தகவல்களைப் பார்வையாளர்களுடன் பகிர்ந்து கொண்டார். இறுதியாக , அறிவியலாளர் E மற்றும் சுற்றுச்சூழல் , வனத்துறை மற்றும் கால நிலை மாற்றத்திற்கான அமைச்சகத்தின் வல்லுனர் மதிப்பீட்டுக் குழுவின் உறுப்பினர் செயலர் டாக்டர் .எச் . கார்க்வால் அவர்கள் , உரையாற்றினார். அவர் தமது உரையில் இந்தியாவில் கடலோர அரித்துப் போதலை கட்டுப்படுத்தி மேலாண்மை செய்கிற நெறிப்படுத்தும் பணிமுறைகள் பற்றிய விளக்கங்களை அளித்தார் .
இந்தக் கருத்தரங்கில் பார்வையாளர்களாக , மூத்த அரசு அதிகாரிகள் , துறை சார்ந்த வல்லுநர்கள் , தமிழ்நாடு நீர் வளத் துறை சார்ந்த பொறியாளர்கள் , மிகச் சிறந்த பல்கலைக் கழகங்களின் கல்வியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது . அனைவரும் இந்தியாவில் கடலோர அரித்தப் போதல் குறித்த ஆக்கப்பூர்வான விவாதங்களை முன் எடுத்துப் பேசினர்.
கடலோரங்களைப் பேணிப் பாதுகாப்பதற்கான ஒருங்கிணைந்த தீர்வுகள்
எச்இசிஎஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டாக்டர் .ஜே. ஆர் . மோசஸ் அவர்கள் கூறியதாவது –
” நமது கடலோரப் பகுதிகளின் தலையாய சிக்கலாகவும் சவாலாகவும் இருப்பது கடலோர அரித்துப் போதல் . அதனை சரிவர செயல்திறன் மிக்க முற்யில் எதிர்கொண்டு கையாள்வதற்கு புத்தாக்க பொறியியல் மற்றும் சுற்றுச்சூழல் துறையில் நன்கு நிபுணத்துவம் பெற்றவர்களின் தலைமை இன்றியமையாதது. யுஜூ நிறுவனத்துடன் இணைவதன் வாயிலாக , இயற்கை சார்ந்த வியூகத் திட்டங்களுடன் அதிநவீன கடல்சார் எனப்படும் மரைன் தொழில்நுட்பகளைக் கையாள்கிற ஒருங்கிணைந்த தீர்வுகளை அளிப்பதை நாங்கள் குறிக்கோளாக கொண்டு செயலாற்ற உள்ளோம். இரு நிறுவனங்களும் இணைந்து கடலோரங்களை நிலைப்படுத்தி , கடல் அரிப்பைத் தடுத்து கடல் மட்டம் உயர்தல் , புயல் போன்ற இயற்கைச் சீற்றங்களிலிருந்து சமூகங்களைப் பாதுகாக்கிற வழிமுறைகளை வடிவமைத்து நடைமுறைப்படுத்த உள்ளோம் ”
எச்இசிஎஸ் நிறுவனமும் யுஜூ நிறுவனமும் இணைந்து மேற்கொள்ளும் இந்த முன்முயற்சிப் பணிகளில் பின்வருவன அடங்கும் –
கடல் சுவர்கள் ,நீர் பிரிப்பான்கள் , சுற்றுச்சூழலுக்கு இணக்கமான அலை தடுப்பான்கள் அமைத்தல் , இயற்கை வழிமுறையில் சிறு மணல் குன்றுகளை மீட்டெடுத்தல் , வெப்ப மண்டலம் சார்ந்த மரக்கன்றுகளை நடுதல் உள்ளிட்ட ஒருங்கிணைந்த தீர்வுகள் . இவற்றின் விளைவாக , அரித்தல் மட்டுப்படுவதுடன் கடல்சார் என்னும் மரைன் வாழ்வியிலுக்கும் பல்லுயிர் பேணுவதற்கும் கடலோர வளர்ச்சியின் சூழலியல் தாக்கத்தைக் குறைப்பதற்கும் வழிவகை செய்யப்படும் எனலாம் .
எச்இசிஎஸ் நிறுவனம் மற்றும் யுஜூ இடையேயான இத்தகைய கூட்டுறவு என்பது இந்தியாவில் இயற்கை வளங்களை அழியாமல் காத்து சமூகத்தினரையும் காத்து சீரான நிரந்தர கடலோர பாதுகாப்பு தொழில்நுட்பங்களை வளர்த்தெடுத்தல் பணிகளைப் பொறுத்த வரை முக்கியத்துவம் வாய்ந்த முதல் அத்தியாயம் என்றால் மிகை ஆகாது .
More Stories
CHENNAI DASTKAR BAZAAR 2025
அகில இந்திய கட்டுனர் வல்லுநர் சங்கம் சார்பில் செய்தியாளர் சந்திப்பு
Sundaram Finance invites entries for Chess Tournament as part of Mylapore Festival