December 4, 2024

அருள்மிகு மங்களாம்பிகை சமேத அகத்தீஸ்வரர் ஆலயம் பைரவர் நூதன சிலைகள் பிரதிஷ்டை

திருவள்ளூர் மாவட்டம் செம்பேடு கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு மங்களாம்பிகை சமேத அகத்தீஸ்வரர் ஆலயத்தில் லோப முத்ரா உடனுறை அகத்தியர் சொர்ண ஆகர்ஷண பைரவர் நூதன சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

காலை கோ பூஜையுடன் துவங்கி வடு பூஜை, கன்னியா பூஜை, சுமங்கலி பூஜை, தம்பதி பூஜை ஆகியவை நடைபெற்றது.

இதனை தொடர்ந்து யாகசால பூஜை ஆரம்பித்து மகா அபிஷேகமானது நடைபெற்றது. மகா அபிஷேகம் முடிந்தவுடன் சிறப்பு அர்ச்சனையும் ஆராதனையும் நடைபெற்றது.

பூஜை முடிந்தவுடன் அனைவருக்கும் வடை பாயசத்துடன் அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் ஜகன் மோகன் ராவ், பெரம்பூர் சீனிவாசன், சூரிய பிரகாஷ், அண்ணா நகர் பிரபாகர், மாரி, மணிகண்டன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

யாக வைபவங்களை ஜன கல்யாண் சுப்பிரமணியன் செய்திருந்தார். சிவலோக தியான பீடம் நிறுவனர் தவத்திரு வாதவூர் அடிகளார் கலந்துகொண்டு அருளாசி வழங்கினார்.

About Author