January 9, 2025

தமிழ்நாடு ஐடி விடுதி உரிமையாளர்கள் நல சங்கம் 4ஆம் ஆண்டு மாபெரும் பொதுக் குமு கூட்டம்

கார்ப்பரேட் நிறுவனங்கள் மீது திணிக்கப்படாத சட்டம் ஏழைகளுக்கு உதவக்கூடிய சிறு விடுதிகள் மீது சட்டங்கள் கொண்டு வருவது நியாயமா என சங்கத்தின் தலைவர் சீதாராமன் பரபரப்பு குற்றச்சாட்டு

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாண அரங்கத்தில் தமிழ்நாடு விடுதி உரிமையாளர் சங்கத்தின் நான்காவது பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் சங்கத்தின் மாநில தலைவர் சீதாராமன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஒன்பது தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது

பின்னர் செய்தியாளர்கள் சந்தித்து பேசிய தமிழ்நாடு விடுதி உரிமையாளர் சங்கத்தின் மாநில தலைவர் சீதாராமன்

2014 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட குழந்தைகள் மற்றும் பெண்கள் மகளிர் தங்கும் விடுதி வரையரைசட்டம் தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.

இந்த சட்டத்தால் 500 நபர்கள் மற்றும் ஆயிரம் நபர்கள் தங்கும் விடுதியில் கொண்டு ஏற்றப்பட்ட சட்டம் இதனால் 30 நபர்களுக்கு உணவு சமைத்து தான் பிழைப்பை நடத்தும் வாழ்வாதாரம் இல்லாத ஆதரவற்ற மகளிர் பெரிதும் பாதிக்கப்படுவதாக குற்றம் சாட்டினர்.

From D- எனப்படும் பொது கட்டத்திற்கு அளிக்கப்பட்ட சான்று பொருந்தாது என்ன அறிவிக்க வேண்டும். சானிட்டரி செப்டி கேட் சுகாதார சான்று சிறிய விடுதிகளுக்கு பொருந்தாது என கேட்டுக்கொண்டனர் மேலும் இது தொடர்ந்து பேசிய சங்கத்தின் மாநில தலைவர் சீதாராமன் காப்பரேட்டுகளுக்கு மீது திணிக்கப்படாத சட்டம் ஏழைகளுக்கு உதவக்கூடிய எங்கள் மீது பல்வேறு சட்டங்கள் கொண்டு வந்து திணிப்பதால் பல்வேறு பிரச்சனைகளையும் இன்னல்களையும் சந்தித்து வருவதாகவும் தமிழகத்தில் சுமார் 20000 விடுதிகள் செயல்படுவதாகவும் இதனால் 25 லட்சத்துக்கு மேற்பட்டோர் பயன்பெறுவதாகவும் எனவே தமிழக முதல்வர் எங்களுடைய கோரிக்கையை ஏற்று உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் தெரிவித்தார் மேலும் இந்த பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் தமிழ்நாடு விடுதி உரிமையாளர் சங்கத்தின் செயலாளர் ஆர் வி சுப்பையா பொருளாளர் வழக்கறிஞர் கார்த்திக் துணைச் செயலாளர்கள் பி சின்ன ராஜா ஏ செந்தில்குமாரன் எம் என் சுப்பராயன் சங்கத்தின் துணைத் தலைவர்கள் ஆர் சீனிவாசலு லதா சீனிவாசலு மற்றும் சங்கத்தின் முக்கிய நிர்வாகிகள் விடுதி உரிமையாளர்கள் என இரண்டு ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

About Author