January 22, 2025

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர் சங்கம் சார்பில் தர்ணா போராட்டம்.

சென்னை மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர் சங்கம் சார்பில் நடைபெற்ற மாபெரும் தர்ணா போராட்டம் சங்கத்தின் மாநில சம்மேலனத்தின் தலைவர் தி தமிழரசு தலைமையில் நடைபெற்றது.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழரசு அவர்கள் இந்த தர்ணா போராட்டத்தின் முக்கிய கோரிக்கையான ஒப்பந்தங்களின் போது சென்னை மத்திய கூட்டுறவு வங்கிக்கு சிறப்பினமாக இதுவரை வழங்கப்பட்டு வந்த ஒரு சிறப்பு ஊதிய பெருந்தொகை 1 1 2021 முதல் வழங்க வேண்டும் வங்கி வளர்ச்சி சம்பந்தமாக சங்கம் கொடுத்த முன்மொழிவுகளை உடனே நிறைவேற்ற வேண்டும் மேலும் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வரும் புத்தாண்டு வெகுமதி யை 2023 2024 ஆம் ஆண்டுக்கு உடனடியாக வழங்கிட வேண்டும் மேலும் தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கு H R A, C C A வுக்கு சென்னை மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கு உடனடியாக வழங்கிட வேண்டும் உள்ளிட்ட முக்கிய கோரிக்கை வலியுறுத்தி இந்த தர்ணா போராட்டம் நடைபெற்று வந்ததாகவும் மேலும் மத்திய மாநில அரசு கூட்டுறவுத்துறை கிராமப்புற மக்களுக்கும் ஏழை எளிய மக்களுக்கும் நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக கூட்டுறவு வங்கி செயல்பட்டு வருவதாகவும் மத்திய அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் தொழிலதிபர்களுக்கும் துணையாக செயல்பட்டு வருவதாக கூறினார் இந்நிலையில் தமிழக அரசும் கூட்டுறவுத்துறை நாளுக்கு நாள் அழிந்து வருவதாக கூறினார் மேலும் மத்திய மாநில அரசு எங்களுடைய கோரிக்கையை ஏற்று உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் தொடர்ந்து காலம் தாழ்த்து வருமானால் அனைத்து கூட்டுறவு சங்கங்களும் ஒன்றிணைத்து மிகப்பெரிய போராட்டத்தை சந்திக்க நேரிடும் என தெரிவித்தார். மேலும் இந்த தர்ணா போராட்டத்தில் சங்கத்தின் கௌரவத் தலைவர் எம் ராஜகேசி சி சி வி எஸ் யு தலைவர் டி எட்வர்ட் ஜான் ராஜா சி சி பி எஸ் யு பொதுச் ஜே சந்திரகுமாரி பொன்னுத்தாய் துணைப் பொதுச் செயலாளர் கே ஸ்டாலின் பொருளாளர் எஸ் செந்தில் பி இ எஃப் ஐ டி என் துணைத் தலைவர் என் ராஜகோபால் பொதுச் செயலாளர் ஈ சர்வேசன் சங்கத்தின் முக்கிய பொறுப்பாளர்கள் உறுப்பினர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர்

About Author