January 22, 2025

கணினி முறையில் ஈ வே பில் முறைப்படுத்த வேண்டும் என தமிழ்நாடு மாநில மணல் லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு வேண்டுகோள்

சென்னை கிண்டியில் உள்ள கனிமவள துறை ஆணையர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கூட்டமைப்பின் சார்பில் தலைவர் யுவராஜ் தலைமையில் அளிக்கப்பட்டது.

தொடர்ந்து செய்தியாளரை சந்தித்த யுவராஜ் அவர்கள் பல கட்ட போராட்டங்கள் நடத்தியும் பலமுறை கோரிக்கை மனு கொடுத்தும் இதுவரையில் நடவடிக்கையும் இல்லை என்றும் கனிம வள சுரங்கங்களை முறைகேடான முறையில் போலியான பில் போடப்பட்டு மற்ற மாநிலங்களுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது இதனால் தமிழக அரசின் வருவாய் இழப்பீடு ஏற்பட்டுள்ளதாகவும் மேலும் தொடர்ந்து ஆறாவது முறையாக கனிம வளத்துறை ஆணையரை சந்தித்து கணினி முறையில் ஈ வே பில் வழங்கப்பட வேண்டும் அப்படி செயல்படும்போது எந்த லாரியும் அதிக பாரங்கள் ஏற்ற முடியாது என்றும் அதிக பாரம் ஏற்றுவதால் விபத்துக்கள் ஏற்படக் கூடிய சூழல் உருவாகும் அதுமட்டுமல்ல தரமற்ற எம் சான்று வழங்கப்படுவதாகவும் இதனால் கட்டிடங்கள் உறுதித் தன்மை இல்லாத நிலை உருவாகும் எனவே தமிழக அரசு 50 சதவீதம் மணல் வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் மேலும் தரமான எம் சான்று வழக்குவதற்கான அரசு ஆய்வு செய்யப்பட வேண்டும் எங்களுடைய முக்கியமான கோரிக்கை கணினி முறையில் ஈ வே பில் போட வேண்டும் அப்படி மீண்டும் காலம் தாழ்த்தும் பட்சத்தில் கணினி உடைக்கும் போராட்டம் மாநிலம் முழுதும் அனைத்து மாவட்டத்திலும் நடைபெறும் என கூறினார் கனிம வள இயக்குனர் அவர்கள் உங்களுடைய கோரிக்கை ஜனவரி மாதத்தில் செயல்படுத்தப்படும் என தெரிவித்ததன் அடிப்படையில் போராட்டங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக தெரிவித்தார். மேலும் இந்நிகழ்வில் சங்கத்தின் பல்வேறு பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்

About Author