சென்னை புரசைவாக்கத்தில் உள்ள அரசு கூர்நொக்கு இல்லத்தில், அரசினர் கூர்நோக்கு சிறார்களுக்கான ‘பாதை’ திட்டத்தை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தொடங்கி வைத்தார்….
தொடர்ந்து விழா மேடையில் பேசிய சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன்,
முதலமைச்சரின் அறிவுரைப்படி “பாதை” திட்டம் கில்லிசில் உள்ள அரசினர் கூர் நோக்கு இல்லத்தில் துவங்கப்படுகிறது. தனியார் தொண்டு நிறுவனத்தோடு இணைந்து 40 லட்சம் மதிப்பீட்டில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டம் மூலம் சின்ன சின்ன குற்றசெயல்களில் ஈடுபட்டு இங்குள்ள சிறார்களுக்கு மன உளவியல் ஆலோசனை வழங்குவது, நடத்தை மாற்றம், மது மற்றும் போதை பழக்கத்திற்கான சிகிச்சை அளித்தல், ஆக்கபூர்வமான எதிர்காலத்தை அமைத்துக் கொள்ள தனித் திறன்களை வளர்த்தல் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படும். இங்குள்ள விசாரணையில் உள்ள சிறார்களுக்கு தீர்ப்புகள் வழங்கப்பட்ட பின்பு அவர்கள் வீட்டுக்கு சென்றாலும் . அவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்யப்படும். இந்த திட்டம் தொடர்ந்து மற்ற இல்லங்களுக்கும் விரிவாக்கம் செய்யப்பட இருக்கிறது என்றார்….
மேலும் பேசிய அமைச்சர் இங்குள்ள சிறார்கள் ஓவியம், நடனம், புகைப்படம் எடுப்பது, சமையல், தையல் எனை சிறார்கள் எதை விரும்புகிறார்களோ அதற்கான பயிற்சிகள் வழங்கப்படுவதாகவும்,
உங்களால் எதையெல்லாம் கற்றுக் கொள்ள முடியுமோ அந்த கலைகளை எல்லாம் கற்றுக் கொள்ளுங்கள். அரசு தேர்வு எழுதுவதற்கும் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகிறது என்று குறிப்பிட்டு பேசிய அவர் இப்படி பல்வேறு பயிற்சிகள் கொடுக்கப்பட்டு நீங்கள் மீண்டும் சீர்திருத்த பள்ளிக்கு வரக்கூடாது என்பதில் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது அனைத்து குழந்தைகள் இல்லமும் முறையாக துறையின் கீழ் பதிவு செய்யப்பட்டு இயங்கி வருகிறது. தமிழகத்தில் 827 குழந்தைகள் இல்லங்கள் செயல்பட்டு வருகிறது என்று கூறினார்….
தொடர்ந்து பேசிய அவர் இந்த துறையின் கீழ் போக்சோ சட்டத்தின் கீழ் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதி உதவி வழங்கும் வகையிலும் முறைப்படுத்தியுள்ளோம். அந்த வகையில் 4,621 குழந்தைகளுக்கு 70 கோடி ரூபாய் நிவாரண நிதியாக வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
More Stories
Ramakrishna Math, Chennai, Wins ‘Spirit of Mylapore’ Award 2025 from Sundaram Finance
ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய மாநில அரசை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
Birds of Paradise – an exhibition of theme-based art quilts