January 22, 2025

பணி நீக்கம் செய்யப்பட்ட பிரதம மந்திரி குடியிருப்பு திட்ட பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும்

பணி நீக்கம் செய்யப்பட்ட பிரதம மந்திரி குடியிருப்பு திட்ட பணியாளர்களுக்கு மீண்டும் பானி வழங்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை தொழில்நுட்ப உதவியாளர்கள் சங்கத்தினர் மாபெரும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பிரதம மந்திரி குடியிருப்பு PMAYG திட்டத்தின்கீழ் இரண்டு ஆண்டுகளாக பணியாற்றி வந்த தொழில்நுட்ப உதவியாளர்களை பணி நீக்கம் செய்ததால் அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குரியதாகி இருக்கிறது என்றும், பணி நீக்கம் செய்யப்பட பணியாளர்களை மீண்டும் பணியில் அமர்த்தி அவர்களுக்குப் பணிப் பாதுகாப்பு வழங்கிட வேண்டும் என்ற கோரிக்கைய வலியுறுத்தி சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே மாபெரும் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு சங்கத்தின் மாநில தலைவர் குணசேகரன் தலைமை தாங்கினார்.

இந்த காத்திருப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பேசிய

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் எஸ் எஸ் பாலாஜி கலந்துகொண்டு இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார். மேலும் பணி நீக்கம் செய்யப்பட்ட பணியாளர்களின் கோரிக்கை நியாயமானது என்றும், தமிழக அரசு மீண்டும் அனைவரையும் பணியில் அமர்த்திட வேண்டுமென ஆதரவு தெரிவித்தார். அதனை தொடர்ந்து செய்தியாளரை சந்தித்த சங்கத்தின் மாநிலத் தலைவர் குணசேகரன், பிரதம மந்திரி குடியிருப்பு பிஎம்ஏஒய்ஜி திட்டத்தில் இரண்டு ஆண்டுகளாக பணியாற்றி பணி நீக்கம் செய்யப்பட்ட தொழில்நுட்ப உதவியாளர்களை மீண்டும் பணியமர்த்தி பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இந்த மாபெரும் காத்திருப்பு போராட்டம் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நடைபெற்றது என்று தெரிவித்தார். மேலும் தமிழக முதல்வர் தங்களை பணியில் அமத்துவார் என்ற நம்பிக்கையோடு இருப்பதாகவும் தெரிவித்தார். எழும்பூர் இராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்ற இந்த காத்திருப்பு போராட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் சங்கத்தின் முக்கிய பொறுப்பாளர்கள் உறுப்பினர்கள் என 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

About Author