December 17, 2024

பனகல் அரசரின் 96 ஆம் ஆண்டு நினைவு தினம்

பனகல் அரசரின் 96 ஆம் ஆண்டு நினைவு தினம். இவரின் வரலாறு. நீதி கட்சி தலைவர்களில் ஒருவர் 1921 இல் சென்னை மாகாண முதலமைச்சர். யுவரின் ஆட்சிக் காலங்களில் பல்வேறு சீர்திருத்தங்களை செய்தவர் .அன்றைய காலங்களில் சமஸ்கிருதம் படித்தால் மட்டுமே டாக்டராகலாம் என்ற நிலையை மாற்றி தமிழ் உள்ளிட்ட மற்ற மொழிகளில் பயின்றாலும் டாக்டருக்கு போகலாம் என்ற சட்டத்தை வடிவமைத்தவர். கோயில் ஆலயங்களை நிர்வகிக்க இந்து அறநிலைத்துறையை உருவாக்கியவர் இவரே. சைதாப்பேட்டை பனகல் மாளிகை இடத்தை இவரின் குடும்பத்தார் அன்றைய அரசுக்கு இலவசமாக கொடுத்தனர். அதுமட்டுமல்ல கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி வளாகம் முழுக்க பனகல் அரசரின் குடும்ப சொத்து அந்த இடத்தை அரசுக்கு இலவசமாக கொடுத்தனர். இவருக்கு தியாகராய நகர் பனகல் பூங்காவில் சிலை அமைக்கப்பட்டது .தற்போது அந்த இடத்தை மெட்ரோ நிர்வாகத்திற்கு கொடுக்கப்பட்டதால் சிலை காணாமல் உள்ளது. எனவே மீதி உள்ள பனகல் பூங்கா இடத்தில் இவரின் சிலையை நிறுவி நிர்வகிக்க வேண்டும்

About Author