சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் விடுதியில் வாழும் கலை அமைப்பின் தலைவர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் லண்டனில் ஐக்கிய நாடுகள் சபையில் உலக தியான தினம் குறித்த முக்கிய உரை நாளை இந்திய நேரப்படி இரவு எட்டு மணி அளவில் நிகழ்த்த உள்ளது தொடர்பான பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் வாழும் கலை அமைப்பைச் சேர்ந்த தமிழக நிர்வாகிகள் சுரேஷ்பாபு, ஜோதி மற்றும் ஜோதிடர் செல்வி தாமோதரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
உலகத்தின் பல இடங்களில் அமைதியை மேம்படுத்தும் முயற்சிகளில் வாழும் கலை அமைப்பின் தலைவர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் சிறப்பாக செயலாற்றி இருப்பதாகவும். அந்த வகையில் இலங்கை, ஈராக், வெனிசுலா மற்றும் கொலம்பியா போன்ற மோதல் இடங்களில் அமைதியை ஏற்படுத்த தியானத்தினை கொண்டு சென்றவர் ரவிசங்கர் எனவும், இந்தியாவில் 500 ஆண்டுகள் பழமையான பாப்ரி மசூதி-ராமர் கோவில் மோதலில் புரிதலுடன் அமைதியை ஏற்படுத்தவும் அவர் ஆற்றிய முக்கிய பங்கு ஆற்றி இருப்பதாகவும், அதே நேரத்தில் கடந்த 43 ஆண்டுகளாக தியானத்தின் நன்மைகளை 180 நாடுகளில் பரப்பியவர். ரவிசங்கர் நாளை லண்டனில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையில் உலக தியான தினம் குறித்த முக்கிய உரை ஆற்ற இருப்பதாகவும் தொடர்ச்சியாக ஒரு மணி நேரம் தொடர்ச்சியாக தியானம் செய்ய இருப்பதாகவும் இதனை இணையதனம் மூலமாக அனைத்து தரப்பட்ட மக்களும் இலவசமாக காண முடியும் எனவும் இதுவரையிலும் உலக அளவில் 50 லட்சத்திற்கு மேற்பட்ட நபர்கள் இந்த தியான நிகழ்வினை பார்வையிட முன்பதிவு செய்து இருப்பதாகவும், அதே நேரத்தில் யார் வேண்டுமானாலும் இதில் கலந்து கொள்ளலாம். என ரவிசங்கர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.
More Stories
Samarthanam Trust Expands Footprints in Coimbatore
Chinmaya Mission and Sanatana Seva Sangham Release “Upanishad Ganga” in Multiple Languages
President Radhika Dhruv Sets a Record-Breaking Sustainability Milestone with Rotary Club of Madras on 76th Indian Republic Day.