சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிக்கையாளர் மன்றத்தில் அகில இந்திய கட்டுனர் வல்லுநர் சங்கம் சார்பில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.
இந்த சந்திப்பில் அகில இந்திய கட்டுனர் வல்லுநர் சங்கத்தில் முன்னாள் தலைவர் ஆர் ராதாகிருஷ்ணன் பேசுகையில்,
“தமிழக அரசு தொழில் துறை முதலீடுகளை ஈர்த்தும் உட்கட்டமைப்புகளை பயன்படுத்தியும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. முன்பு போல எப்போதும் இல்லாத அளவில் வளர்ச்சிப் பணிகள் தமிழகமெங்கும் நடைபெற்ற வருகிறது அதற்கான கட்டுமான பணிகளை நாங்கள் செயல்படுத்தி வருகிறோம்
அதற்கான கனிம மூலப் பொருட்களான மணல், ஜல்லி, எம் சாண்ட், செங்கல் போன்றவை பல்வேறு காரணங்களால் தற்போது உற்பத்தி குறைந்து தட்டுப்பாடு ஏற்பட்டு பணிகள் தேக்கமடைகிறது. நாங்கள் அரசு ஒப்பந்த பணிகளை குறித்த காலத்தில் முடிக்க வேண்டியுள்ளது. மேலும் தனியார் வீடுகளும் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளும் RERA விதிகளின்படி குறித்த காலத்தில் கட்டி முடித்து ஒப்படைக்க வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கிறோம்.
பொதுப்பணித்துறையின் மணல் குவாரிகள் இயங்காததால் ஆற்று மணல் கிடைக்கவில்லை. ஆற்று மணலை பயன்படுத்தி அரசு துறையில் கட்ட வேண்டிய கட்டுமானங்கள் அனைத்தும் நின்று விட்டன. இதை அரசின் கவனத்திற்கு தெரியப்படுத்துகிறோம். ஆற்று மணல் கிடைக்காததாலும் மேற்கூறிய கனிம மூலப்பொருட்களின் தட்டுப்பாட்டாலும் எம் சாண்டின் விலை இருமடங்கு உயர்ந்து விட்டது.
கனிமவளத்துறையின் கடுமையான நடவடிக்கையால் கல்குவாரி உரிமையாளர்கள் கிரஷரில் ஜல்லி உடைக்கும் நேரத்தை குறைத்து விட்டார்கள். உற்பத்தியின் அளவுவும் குறைந்துவிட்டது. இதனால் தேவை அதிகரித்து மேற்கூறிய பொருள்களின் விலை அதிகரித்துள்ளது. அரசு துறையின் உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டங்களால் கட்டிடங்கள், வீட்டு வசதி, பாலங்கள், சாலைகள், நீர்வழி கால்வாய்கள், மேலும் தனியார் துறையின் கட்டிடங்கள் எல்லாவற்றிற்கும்மான ஜல்லி, மற்றும் எம் சாண்ட் அளவை கணக்கில் கொள்ள வேண்டும்.
அரசு மற்றும் தனியார் கல்குவாரிகளுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்தி முறைப்படுத்தி கட்டுமானத்திற்கான கனிம பொருட்கள் அரசு விலைகளின் படி கிடைக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அரசு ஒப்பந்தக்காரர்கள் மற்றும் தனியார் துறையின் ஒப்பந்தக்காரர்கள் வாழ்வாதாரத்தை காப்பாற்றி தருமாறு கேட்டுக்கொள்கிறோம்
நானும் கனிமவளத்துறை அமைச்சர் சந்தித்து அதில் இருக்கக்கூடிய பிரச்சனைகளை களைய வேண்டும் என்று கூறினேன். இதனால் தமிழகத்தின் திட்ட பணிகள் எல்லாம் முடிக்க முடியாமல் வாய்ப்பு உள்ளது. இதனை அரசு முன் வந்து உடனடியாக சரி செய்ய வேண்டும்” என்று பேசினார். மேலும் இந்த செய்தியாளர் சந்திப்பில் திரு சங்கு மற்றும் அகில இந்திய கட்டுநர் வல்லுனர் சங்கத்தின் முன்னாள் முன்னாள் தலைவரும் பொருளாளருமான மு மோகன் மாநிலத் தலைவர் பி பழனிவேல் மாநில பொருளாளர் பி பரமேஸ்வரன் மாநில முன்னாள் தலைவர் கே ஜெகநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
More Stories
Sundaram Finance invites entries for Chess Tournament as part of Mylapore Festival
Kancheepuram Varamahalakshmi SilksOpens its new show room at Adyar, Chennai
Chef Damu’s Suvaiyin Sangeetham: A Symphony of Flavors and Celebrations