January 9, 2025

அழகு துறையில் உலக கின்னஸ் சாதனை ஆல் இண்டியா ஹேர் பியூட்டி அசோசேஸியன் சார்பில்

அழகு துறையில் உலக கின்னஸ் சாதனை
பெண்கள் சுய அலங்கார உலக சாதனை முயற்சி நிகழ்ச்சி ஆல் இண்டியா ஹேர் பியூட்டி அசோசேஸியன் சார்பில் சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலை கீழ்பாக்கம் செயிண்ட் ஜான் பள்ளியில் அமைந்துள்ள விங்க்ஸ் கன்வென்சன் சென்டரில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் ஆல் இண்டியா ஹேர் & பியூட்டி அசோஸேசியன் தலைவர் டாக்டர் சங்கீதா சௌஹான் , வீ கேர் ஹேர் அண்ட் ஸ்கின் கிளினிக் நிறுவனத் தலைவரும், நிர்வாக இயக்குநருமான பிரபாரெட்டி, நேச்சுரல்ஸ் ப்யூட்டி சலூன் நிர்வாக இயக்குநர் வீணா குமரவேல் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு உலக சாதனை முயற்சியில் வெற்றிப் பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.
இந்த சாதனை முயற்சி போட்டியில் 2300 பெண்களும் சேலைக்கட்டுதல், மற்றும் சுயமாக அலங்காரம் (மேக் ஓவர்) செய்து கொள்ளுதல் என்று இரண்டு போட்டிகள் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
பின்பு
வீகேர் குழுமம் நிர்வாக இயக்குநர் பிரபா ரெட்டி மற்றும்எஸ் .முகுந்தன் சத்தியநாராயணன் வீகேர் குழுமத்தலைமை செயல்திகாரி உடன் .செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியதாவது:-
சிகை அலங்காரம் செய்தல் , மற்றும் அழகு நிபுணர் ஆக பிரபா ரெட்டி அழகு அகாடமி மூலம் பயிற்சியை அளிக்கிறது. இப்பயிற்சியை முடிந்தவர்கள்
அழகு நிலையங்கள் அமைத்து சுயத்தொழில் செய்யும் வாய்ப்புகளை ஏற்படுகிறது.
மேலும் இந்நிகழ்வானது உலக சாதனை முயற்சிக்காகவும், பெண்களுக்கு பொருளாதாரத்தில் சுய முடிவு செய்யும் அதிகாரமளித்துக்கு
உந்துகோலாக அமையும் .
இந்நிகழ்ச்சியின் முடிவாக தமிழக தொழிலாளர் நல துறை அமைச்சர் சி.வ. கணேசன் கலந்து கொண்டு பேசுகையில் …
மார்பகப்புற்றுநோய், உடல் உறுப்பு தானம் மற்றும் காப்பீட்டின் அவசியத்தையும் வலியுறுத்தும் வகையில் விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார் என்றும் இப்பேரணியில் 2300 பெண்கள் பங்கேற்னர் இதன் மூலம் அழகு நிபுணத்துவத்தை பற்றிய நேர்மறை அறிவை அனைவரும் பெறுவார்கள் என்று நம்புகிறோம் என்றார் .

About Author