January 10, 2025

ஸ்ரீ வேங்கடாத்ரி பஜனை சமாஜத்தில் அணைத்து ஜீவராசிகளின் நலன் வேண்டி குருஜி ஸ்ரீமான் பக்த பார்த்தசாரதி ஸ்ரீ ஜென்ம ரக்ஷக ஹரி நாம சங்கீர்

VR news

சென்னை பொன்னியம்மனமேட்டில் அமைந்துள்ள ஸ்ரீ வேங்கடாத்ரி பஜனை சமாஜத்தில் அணைத்து ஜீவராசிகளின் நலன் வேண்டி குருஜி ஸ்ரீமான் பக்த பார்த்தசாரதி ராமானுஜதாஸரின் நல்லாசியுடன் வாரம்தோறும் சிறப்பான முறையில் ஸ்ரீ ஜென்ம ரக்ஷக ஹரி நாம சங்கீர்த்தனம் நடைபெற்று கொண்டிருக்கிறது. ஸ்ரீ ஆண்டாள் நாச்சியாருக்கு உகந்த மார்கழி மாதத்தில் தினமும் காலை திருப்பாவை சேவை மிகவும் சிறப்பாக நடைபெறுகிறது. 5 ஜனவரி மார்கழி மூன்றாம் வார ஞாயிற்று கிழமையன்று காலை சிறப்பான முறையில் திருப்பாவை திருவீதி பஜனை சேவை ஸ்ரீ ஸ்ரீனிவாசன் ராமானுஜதாஸர் தலைமையில் ஆண்டாள் ஆழவார் கோஷ்டியினருடன் மிகவும் சிறப்பான முறையில் ஸ்ரீ வேங்கடாத்ரி பஜனை சமாஜத்தில் நடந்தேறியது. பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் மற்றும் திருவேங்கடமுடையானின் அருள் பெற்றனர்.

About Author