January 15, 2025

அர்ஜுனா அறக்கட்டளையின் சார்பாக பொங்கல் திருநாளை கொண்டாடி பல்வேறு நலதிட்ட உதவி

அர்ஜுனா அறக்கட்டளையின் சார்பாக கடந்த 3 ஆண்டுகளாக பொங்கல் திருநாளை கொண்டாடி பல்வேறு நலதிட்ட உதவிகளை செய்து வருகிறது. அதன் ஒரு தொடர்ச்சியாக சென்னை எம்.ஜி.ஆர் நகரில் பரணி உடற்பயிற்சி நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட 400க்கும் மேற்பட்டோருக்கு மதிய உணவு, மற்றும் பொங்கல் தொகுப்பாக அரிசி, வெல்லம், பருப்பு, நெய், மற்றும் முந்திரி, திராட்சை போன்ற பொருட்கள், மற்றும் டிபன் பாக்ஸ் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் சர்வதேச ஆணழகன் பாஸ்கரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

இந்த அறக்கட்டையின் மூலம் கல்வியில் பின்தங்கிய மாணவர்களுக்கு உதவி செய்வது , ஒவ்வொரு வருடமும் 4 பள்ளிகளுக்கு நிதியை வழங்குவது என திட்ட மிட்டு செய்து வருகிறோம்.
உலக அளவில் போட்டிகளில் பங்கு கொண்டதின் விளைவாக கிடைத்த தொடர்புகள் மூலம் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து உதவிகள் கிடைக்கின்றது . இதை வைத்துக்கொண்டு இதுவரையில் 12 க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு தலா, 2 லட்சம் வரையில் நிதியுதவியும், பின்தங்கிய மாணவர்களுக்கு கல்விக்காக உதவிகளும் வழங்கி இருக்கிறோம் .
குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த காமராஜர், சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோர் வருகை புரிந்த பள்ளியில் என் பெற்றோர்கள் படித்திருக்கிறார்கள் .
அப்பள்ளி பழமையான கட்டிடமாக இன்றும் அப்படியே உள்ளது . அப்பள்ளிக்கு புரனமைக்க ரூ. 1.25 லட்சம் வரை உதவி செய்தோம் .
இதேபோல் பல பள்ளிகளுக்கு வழங்கியும் வருகிறோம் மேலும் கடந்த மூன்று ஆண்டுகளாக பள்ளி மாணவர்களுக்கு தேவையான உபகரணங்கள் ஆர்வோ வாட்டர் பில்டர் வழங்கி வருகிறோம் என்று கூறினார்.

மேலும் இந்நிகழ்ச்சியில் அர்ஜுனா அறக்கட்டளையின் நிறுவனத் தலைவர் புவனேஸ்வரி பாஸ்கரன் நிர்வாகிகள் பாலமுருகன் , செந்தில்குமார், கண்ணன், கணேசன், அருணாச்சலம், ஜோஸ்வா, தனபால், லோகேஷ், இம்தியாஸ் பாபு , கௌதம் மற்றும் சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் மாரிமுத்து உள்ளிட்ட பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

About Author