January 21, 2025

ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய மாநில அரசை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே மருதுசேனை சங்கத்தின் சார்பாக ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரி மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .இதில் 100 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

தொடர்ந்து செய்தியாளரை சந்தித்த மருதுசேனை தென் மண்டல தலைவர் மாசிலாமணி மற்றும் சங்கத்தின் மாநில கொள்கை பரப்பு செயலாளர் தினேஷ் செய்தியாளர்களிடம் கூறும்போது

ஜாதிவாதி கணக்கெடுப்பின் முக்கியத்துவத்தை மத்திய அரசுக்கு உணர்த்தவே இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மருது சேனையினுடைய நோக்கம் அனைத்தும் இந்த ஆர்ப்பாட்டத்தின் மூலம் மத்திய மாநில அரசுகளுக்கு வெளிப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு ஆர்ப்பாட்டத்தை நடத்தினோம்.

முக்குலத்தோர் என்கிற அடிப்படையில அகமுடையார்னு சொல்றாங்க நாங்க தனித்துவம் அகமுடையார் என்பது முக்குலத்தோடு ஒப்பிடுவது அல்ல அகமுடையார் சுதந்திரத்திற்காக போராடியவர்களின் வழி வளர்ந்தவர்கள். அவர்களை ஒரு சமுதாய மக்களை வெளியிலே பெரிய விடாமல் செய்து கொண்டிருக்கிறார்கள் அகமுடையர் சமுதாய மக்களின் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய அவசியம் கருதி இதனை ஏற்பாடு செய்திருக்கிறோம் என தெரிவித்தனர் இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் முக்கிய பொறுப்பாளர்கள் நிர்வாகிகள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

About Author