February 15, 2025

ஏ ஜே சுபைதா மெடிக்கல் சென்டர் சார்பில் மகளிர்குக்கான இலவச மாபெரும் சிறப்பு மருத்துவ முகாம்

சென்னை எழும்பூரில் அமைந்துள்ள ஏ ஜே சுபைதா மெடிக்கல் சென்டர் சார்பில் மகளிர்கான இலவச மாபெரும் சிறப்பு மருத்துவ முகாமினை அகில இந்திய வெளிநாட்டில் மருத்துவம் படித்த டாக்டர்கள் நல சங்கத்தின் தலைவர் டாக்டர் அமீர்ஜஹான் அவர்கள் மருத்துவ முகாமினை துவக்கி வைத்தார் .

ஏ ஜே சுபைதா மெடிக்கல் சென்டர் மூலம் தொடர்ந்து இலவச மருத்துவ முகாம் நடைபெற்று வருவதாகவும் இந்த மருத்துவ முகாமினால் ஏழை எளிய மக்கள் பயனடைவார்கள் எனவும் குறிப்பாக அனைத்து நோயாளிகளுக்கும் முழு பரிசோதனை செய்யப்பட்டு அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவி ஏ ஜே சுபைதா மெடிக்கல் சென்டர் மூலம் பல்வேறு சிறப்பு மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகவும் அந்த வகையில் இன்று மகளிருக்கான இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது இதன் மூலம் பெரும்பாலான ஏழை எளிய மக்கள் பயன்பெறுவார்கள் அதுமட்டுமல்லாமல் மக்கள் சுத்தமான சுகாதார வாழ்வை மேம்பட டாக்டர் அமீர்ஜஹான் அவர்கள் தொடர்ந்து மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருவதாகவும் நோயாளிகளுக்கு தேவையான மருத்துவ உதவி செய்து வருவதாகவும் குறிப்பாக டாக்டர் அமீஜஹான் அவர்களுடைய முக்கிய நோக்கம் நகரம் மட்டுமல்ல கிராமப்புற மக்களுக்கும் மருத்துவ ஆலோசனை மற்றும் மருத்துவ உதவி செய்ய தயாராக உள்ளதாகவும் மேலும் டாக்டர் என்ற பட்டம் இருந்தால் மட்டும் போதாது அவை மற்றவர்களுக்கு உதவிகரமாக இருக்க வேண்டும் எப்போதும் ஏ ஜே சுபைதா மெடிக்கல் சென்டர் தொடர்ந்து மருத்துவ சேவையோடு உன்னத நோக்கத்துடன் செயல்படும் என தெரிவித்தார்.

About Author