February 20, 2025

தமிழ்நாடு ஐடி விடுதி உரிமையாளர்கள் நல சங்கத்தின் சார்பாக அமைச்சர் கே என் நேரு சந்தித்து

கிராமப்புறங்களில் இருந்து வரும் ஏழை எளிய மாணவ மாணவியர் மற்றும் இளைஞர்களுக்கு குறைந்த கட்டணத்தில் தங்குவதற்கும் உணவு அளிப்பதற்கும் தாய் வீடாக விடுதி மட்டுமே என தமிழ்நாடு விடுதி உரிமையாளர்கள் நல சங்கத்தின் தலைவர் லயன் சீதாராமன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு ஐ டி விடுதி உரிமையாளர்கள் நல சங்கத்தின் சார்பாக இரண்டு முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து தமிழ்நாடு நகர்புற வளர்ச்சி துறை மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் மாண்புமிகு கே என் நேரு அவர்களை நேரில் சந்தித்து மனு அளிக்கப்பட்டது.

மேலும் அதனைத் தொடர்ந்து செய்தியாளரை சந்தித்த தமிழ்நாடு ஐடி விடுதி உரிமையாளர்கள் நல சங்கத்தின் தலைவர் லயன் சீதாராமன் அவர்கள் எங்களுடைய முக்கிய கோரிக்கையான விடுதி நடத்துபவர்களிடம் கமர்சியல் டேக்ஸ் வசூலிக்கப்படுகிறது இதனால் விடுதி நடத்த முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது இந்த நிலையில் அமைச்சர் கே என் நேரு அவர்களை நேரில் சந்தித்து சாதாரண விடுதி நடத்தவர்களுக்கு கமர்சியல் அதிக வரி வசூல் செய்வதால் விடுதிகள் மூடப்படும் நிலை உருவாகியுள்ளது விடுதிகள் மூடப்பட்டால் கிராமப்புறங்களில் இருந்து வரும் ஏழை எளிய மாணவ மாணவிகள் மற்றும் இளைஞர்கள் பள்ளி கல்லூரி செல்பவர்கள் பணி செய்பவர்கள் அதிக வாடகை கொடுத்து அவர்களால் படிக்கவோ பணி செய்யவோ இயலாத சூழ்நிலை ஏற்படும் இதனால் ஏழ்மை நிலையில் உள்ள மாணவ மாணவி மற்றும் இளைஞர்கள் பெரும்பாலும் பாதிக்கப்படுவார்கள் எனவே அமைச்சர் அவர்கள் எங்களுடைய முக்கிய கோரிக்கையான விடுதிகளுக்கு அதிக வரியை தவிர்த்து சாதாரண வரி சலுகை கொண்டு வர வேண்டும் அதுமட்டுமல்லாமல் குடிநீருக்கு அதிக வரி செலுத்தி வருவது மிக கடினமாக உள்ளது ஆகவே குடிநீருக்கென குறைந்த வரி கட்டுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் மேலும் எங்களுடைய இரண்டு கோரிக்கைகளை மாண்புமிகு அமைச்சர் அவர்கள் நிறைவேற்றி தர வேண்டும் என கேட்டுக்கொண்டனர் அமைச்சர் அவர்கள் உங்களுடைய பிரச்சினைகளுக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார் மேலும் எங்களுக்கு அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர் யாரும் எந்தவித தொந்தரவும் செய்வதில்லை என்றும் அதேபோல் உயர் அதிகாரிகள் எந்த தொந்தரவும் செய்யவில்லை என்றும் குறிப்பாக சாதாரண அரசியல்வாதிகள் கீழ் நிலையில் உள்ள அதிகாரிகள் எப் எம் டி இருக்கா பிளான் அப்ரூவல் இருக்கா என தேவையற்ற கேள்விகள் கேட்டு தொந்தரவு செய்வதாகவும் தெரிவித்த நிலையில் அமைச்சர் அவர்கள் பிரச்சனைக்கு உட்பட்டவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்த நிலையில் அவர் கூறியது எங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார். இந்த நிகழ்வில் மாநில பொதுச் செயலாளர் மாநில துணைத்தலைவர்கள் மற்றும் பொருளாளர் உள்ளிட்ட சங்கத்தின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

About Author