March 1, 2025

வியாபாரிகளுக்கு ஹிந்தி தேவை. ஆனால் ஹிந்தியை கட்டாயபடுத்த வேண்டாம் சட்டம் ஆக்காதீர்கள்

என்னை விமர்சனம் செய்பவருடைய குடும்பம் என்னுடைய குடும்பம். அவரை என்னுடைய குடும்பமாக நினைத்துப் பார்க்கிறேன் அவருக்கு இன்னும் பக்குவம் வேண்டும் தன்னை தாழ்த்தி பேசியவர்களுக்கு பதில் அளித்தார்-R.R சேலம் பிரியாணி குழுமத்தின் நிறுவன தலைவர் தமிழ்ச்செல்வன்.

கடந்த 21 முதல் 23 வரை வியட்நாம் நாட்டின் டனாங் நகரில் நடைபெற்ற இரண்டாவது ஆண்டு உலகத் தமிழர் மாநாடு தொடர்பாக செய்தியாளர்களை
சேலம் RR தமிழ்ச் செல்வன் சென்னை சேப்பாக்கம் பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர்,

கடந்த 21 முதல் 23 வரை ஆகிய மூன்று நாட்கள் வியட்நாமில் இரண்டாவது உலக தமிழ் மாநாடு சிறப்பாக நடைபெற்றது.

இதில் 40 மேற்பட்ட நாடுகளில் இருந்து 100 கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.வணிகம் சார்ந்த கருத்துக்கள் பகிரபட்டது இதில் சிறப்பு அழைப்பாளராக விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர்
திருமாவளவன், பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் இலங்கை இருந்து வந்திருந்தார்கள்.

யாழ்ப்பாணத்தில் எங்களுடைய புதிய கிளையை தொடங்க உள்ளோம்

இலங்கை ஒரு கோரிக்கை வைத்தேன்.
புலம்பெயர்ந்த தமிழர்கள் தங்களுடைய பிள்ளைகளுக்கு
தமிழ் சொல்லி தரவில்லை என சொன்னார்கள். புலம்பெயர்ந்தவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு தமிழ் சொல்லித் தர வேண்டும் எனவும்

யாழ்ப்பாணத்தில் உள்ள வீடுகள் இன்னும் புதுபிக்கவில்லை.

தமிழர்கள்
யாழ்ப்பாணத்தில் தொழில் தொடங்குங்கள்.பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் தொழில் தொடங்குங்கள்.

மொழி நம் உயிர்.
தமிழில் பிள்ளைகளுக்கு பெயர் வையுங்கள்.

இந்தியாவில் இருந்து நம் பணம் வெளியே போக கூடாது.
அனைவருக்கும் உதவி செய்யுங்கள்.
விவசாயம், சுற்றுலா போன்றவற்றை வளர்ச்சி அடைய செய்யுங்கள்.

சமூக வலைதளத்தில் உங்களைக் குறித்து விமர்சனங்கள் வருகிறது என்ற கேள்விக்கு ?

நீங்கள் பேசுகின்ற பேச்சு என்னை கடுகளவும் தாக்காது நான் கடுமையான உழைப்பாளி.

அனைவருக்கும் உதவி செய்யுங்கள்.மனிதர் மீது கோபம் இருக்கலாம் மண் மீது கோபம் இருக்க கூடாது.

என்னைப் பற்றி பேசுங்கள். ஆனால் என் குடும்பத்தை பற்றி பேசாதீர்கள்.

விமர்சனம் செய்பவருடைய குடும்பம் என்னுடைய குடும்பம். அவரை என்னுடைய குடும்பமாக நினைத்துப் பார்க்கிறேன் அவருக்கு இன்னும் பக்குவம் வேண்டும்.

மாநாடு சிறப்பாக இருந்தது சில கருத்து மோதல்களும் இருந்தது அதிக பேருக்கு பேசுவதற்கான வாய்ப்புகளும் கிடைக்கவில்லை நேரம் குறைவாக இருந்தது

மூன்றாவது மொழி அவசியமா என்ற கேள்விக்கு ?
எங்கள் வியாபாரிகளுக்கு ஹிந்தி தேவை. ஆனால் ஹிந்தியை கட்டாயபடுத்த வேண்டாம் சட்டம் ஆக்காதீர்கள் ஆங்கிலம் வளர வேண்டும் என போராட்டம் செய்யவில்லை

தமிழ்நாட்டிற்கு காமராஜர், கலைஞர் போன்ற பல தலைவர்கள் நமக்கு பல நன்மைகளை செய்துள்ளனர் என தெரிவித்தார்.

About Author