March 3, 2025

தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலமாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக எடப்பாடி பழனிச்சாமி

தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொள்ள உள்ளதாக பேரமைப்பின் தலைவர் கொளத்தூர் ரவி தெரிவித்துள்ளார்

மே ஐந்தாம் தேதி நடைபெற உள்ள 42 ஆவது வணிகர் தினம் மற்றும் ஏழாவது மாநில மாநாடு குறித்த ஆலோசனைக் கூட்டம் சென்னை அமைந்தகரை உள்ள தனியார் மண்டபத்தில் மத்திய சென்னை மாவட்டத்தின் சார்பில் நடைபெற்றது இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பெயர் அமைப்பு தலைவர் கொளத்தூர் ரவி கலந்து கொண்டு மாநாடு குறித்து ஆலோசனை வழங்கினார் இந்த கூட்டத்தில் மத்திய சென்னை மாவட்ட தலைவர் செல்வநாயகம், செயலாளர் காளிமுத்து, பொருளாளர் ரகுபதி உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

ஆலோசனை கூட்டத்தை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கொளத்தூர் ரவி 42வது வணிகர் தின மற்றும் ஏழாவது மாநில மாநாடு வணிகம் பாதுகாப்பு என்ற தலைப்பில் நடைபெற உள்ளதாகவும் இரண்டு லட்சம் வணிகர்கள் கலந்து கொள்ள உள்ள இந்த மாநாட்டிற்கு சிறப்பு அழைப்பாளராக எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொள்ள உள்ளதாக தெரிவித்தார்

About Author