March 5, 2025

வாஸன் கண் மருத்துவமனையில் சினிமா பெப்சி தொழிலாளர்களுக்கு மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம்

சென்னை வடபழனியில் உள்ள வாஸன் கண் சிகிச்சை இலவச மருத்துவ முகாம் மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் கௌசிக் தலைமையில் நடைபெற்றது.

இந்த மாபெரும் இலவச கண் சிகிச்சை மருத்து முகாமில் சினிமா பெப்சி தொழிலாளர் சங்கத்தின் தலைவரும் இயக்குனருமான ஆர்கே செல்வமணி இயக்குனர் ஆர் வி உதயகுமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மேலும் தொடர்ந்து செய்தியாளரிடம் தெரிவித்த டாக்டர் பூர்ணிமா ஆர் ஸ்ரீ வஜ்சுளா அவர்கள் வாஸன் கண் மருத்துவமனை தொடர்ந்து தொழிலாளர்களுக்கும் ஏழை எளிய மக்களுக்கும் வாஸன் கண் மருத்துவமனை மூலம் இலவச கண் பரிசோதனை செய்யப்பட்டு வருவதாகவும் அந்த வகையில் இன்று சினிமா பெப்சி தொழிலாளர்களுக்கு மார்ச் 04 03 2025 முதல் 31 03 2025 அன்று வரை இந்த மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெறும் எனவும் இதன் மூலம் பெப்சி தொழிலாளர்கள் அனைவரும் பயனடிவார்கள் என தெரிவித்தார். இந்த மாபெரும் கண் மருத்துவ முகாம் நிகழ்ச்சியில் வாஸன் கண் மருத்துவமனையின் டாக்டர் பூர்ணிமா ஆர் ஸ்ரீ வச்சலா டாக்டர் என் கிருஷ்ணகுமார் டாக்டர் பி. அசோக் குமார் மற்றும் வாஸன் கண் மருத்துவமனையின் ஊழியர்கள் பெப்சி தொழிலாளர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

About Author