March 6, 2025

தமிழக முதல்வரின் 72 ஆவது பிறந்தநாள் முன்னிட்டு எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்

Chennai: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் பிறந்த நாளை எளியோருக்கு உதவிடும் வகையில் கொண்டாடும் விதமாக, எழும்பூர் தொகுதிக்குட்பட்ட, வார்டு எண்.99, நேரு பார்க் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியக் குடியிருப்புப் பகுதியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் அக்குடியிருப்பைச் சேர்ந்த 350 குடும்பங்களுக்கு ஐந்து கிலோ கொண்ட அரிசிப் பை, புடவை, கைலி, பெட்ஷீட், பாய் உள்ளிட்டவற்றைக் தி.மு.கழகச் சட்டத்துறை இணைச் செயலாளரும் எழும்பூர் சட்டமன்ற உறுப்பினருமான வழக்கறிஞர் இ.பரந்தாமன் வழங்கினார். தொடர்ந்து செய்தியாளரை சந்தித்த சட்டமன்ற உறுப்பினர் இ பரந்தாமன் அவர்கள் தமிழக முதல்வர் பிறந்தநாள் ஏழை எளியோர் பயன்பெறும் விதமாக எழும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது தொடர்ந்து தமிழக முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் அதே நேரத்தில் தமிழக மக்கள் வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் மீண்டும் தமிழகத்தின் முதலமைச்சராக திரு முக ஸ்டாலின் வரவேண்டும் என மக்கள் விரும்புவதாக தெரிவித்தார்

About Author