மக்கள் பயன்படுகின்ற வகையில் பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் இந்திய அஞ்சல் துறை நடத்தும் சிறப்பு ஆதார் முகம் 109வது வார்டு மாமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் திருமதி சுகன்யா செல்வம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் சிறப்பு ஆதார் முகாமினை தமிழ்நாடு வாழ் அனைத்து மக்கள் இயக்கத்தின் தலைவர் சுரேஷ் அவர்கள் ஒருங்கிணைத்து ஏற்பாடு செய்திருந்தார்.
தொடர்ந்து செய்தியாளரை சந்தித்த 109 வது மாமன்ற உறுப்பினர் திருமதி சுகன்யா செல்வம் அவர்கள் தெரிவித்ததாவது தொடர்ந்து 109 ஆவது மாமன்ற அலுவலகத்தில் சிறப்பு மருத்துவ முகாம் கண் சிகிச்சை முகாம் மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி விளையாட்டுப் போட்டி தொடர்ச்சியாக நடைபெற்று வருவதாகவும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் பரிசுப் பொருட்கள் சான்றிதழ் ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருவதாகவும் அதன் அடிப்படையில் இன்று 14 3 2025 மற்றும் 15 3 2025 இரண்டு நாட்கள் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிறப்பு ஆதார் முகாம் நடைபெறும் என்றும் இதன் மூலம் இப்பகுதி மக்கள் மட்டுமல்ல அருகாமையில் உள்ள யாராக இருந்தாலும் இந்த ஆதார் முகம் இப்பகுதி மக்களுக்கு பயனுள்ளதாக அமையும் என்றும் மேலும் தமிழ் தமிழ் வளர்ச்சி குறித்தும் தொடர்ந்து மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு திருக்குறள் போட்டி பேச்சுப்போட்டி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் இதில் வெற்றி பெற்று முதல் இடம் பிடிப்பவர்களுக்கு ஊக்கத் தொகையாக 15000 ரூபாயும் தமிழக முதல்வர் நேரில் சந்திக்கும் வாய்ப்பு அமைத்து தரப்படும் என தெரிவித்தார் இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் பகுதி தலைவர் கராத்தே செல்வம் மோகன் நெல்சன் பிரிட்ஜ் பாஸ்கர் உள்ளிட்ட அஞ்சல் துறை சார்ந்த ஊழியர்கள் பொதுமக்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
More Stories
சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 135வது பிறந்த நாளை முன்னிட்டு நாடு முழுவதும் மிகை எழுச்சியாக கொண்டாடப்பட்டது
தமிழ்நாடு வக்பு சொத்துக்களை காலக்கெடுவுக்குள் டிஜிட்டல் முறையில் அளவீடு செய்ய தமிழ் மாநில முஸ்லிம் லீக் வலியுறுத்தல்
Monica Singhal’s magical session “CURE IS SURE” in Chennai