April 12, 2025

பங்குனி திருவிழாவை முன்னிட்டு தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

சென்னை மயிலாப்பூரில் உள்ள தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் தலைமை அலுவலகத்தில் சங்கத்தின் மாநிலத் தலைவர் திரு N நாராயணன் அவர்கள் கலந்து கொண்டு பங்குனி திருவிழாவை முன்னிட்டு இரண்டாயிரத்துக்கு மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார் மேலும் இச்சங்கத்தின் மூலம் 40 ஆண்டுகளுக்கு மேலாக ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு உதவிகள் செய்யப்பட்டு வருவதாகவும் குறிப்பாக மாணவ மாணவியருக்கு கல்வி உதவித் தொகை கல்விக்கான உபகரணங்கள் வழங்குதல் அதேபோன்று கொரோனா பேரிடர் காலத்தில் மாநிலம் முழுவதும் ஏழை எளிய மக்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது பெரும் மழை காலங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஜாதி மொழி இனம் பாராமல் அவர்களுக்கு தேவையான உதவிகள் தமிழ்நாடு பிராமண சங்கத்தின் மூலம் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் அனைவருக்கும் உதவிகள் செய்ய தயாராக உள்ளதாகவும் தெரிவித்தனர். இந்த அன்னதான நிகழ்ச்சிக்கு கொளத்தூர் கமலம்மாள் கேட்டரிங் உரிமையாளர் லலிதா சிவசுப்பிரமணியன் தம்பதிகள் அன்னதானத்திற்கு உறுதுணையாக செயல்பட்டனர் மேலும்

இந்த நிகழ்ச்சியில் மாநிலத் துணைத் தலைவர் சுந்தரி ரெங்கநாதன் மாநில பொதுச்செயலாளர் y ரமேஷ் மாநிலப் பொருளாளர் பருத்திப்பட்டு நரசிம்மன் தலைமை நிலைய செயலாளர் பாலசுப்ரமணியன் கொள்கை பரப்புசெயலாளர் ராமநாதன் வடசென்னை மாவட்டத்தலைவர் ஸ்வாமிநாதன் பொருளாளர் ராமஸ்வாமி மத்திய சென்னை மாவட்டத்தலைவர் சதீஷ்குமார் பொதுச்செயலாளர் ஶ்ரீனிவாசன் தென்சென்னை மாவட்டத்தலைவர் ல்லிதாசுகுமார் மற்றும் மாநில மாவட்ட கிளை நிர்வாகிகள் அன்னதானத்தில் கலந்து கொண்டனர் மேலும் இந்த அன்னதான நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைத்து மாநிலத் துணைத் தலைவர் சுந்தரி ரங்கநாதன் மிகச் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்தார்.

About Author